தபால் துறையில் 5 வருடத்தில் 4 லட்சம் வருமானம் தரும் திட்டம்..

Advertisement

Post Office Rd Scheme Details in Tamil

பெரும்பாலானவர்கள் எதிர்காலத்தை நினைத்து சேமிப்பை பற்றிய சிந்தனை அதிகம் உள்ளது. சேமிக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டும் இருந்தால் போதாது, எதில் சேமித்தால் பாதுகாப்பாக இருக்கும், லாபம் அதிகமாக இருப்பது என்று பல வழிகளில் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அந்த வகையில் வங்கிகள் போலவே தபால் துறையும் பல வகையான திட்டங்களை கொண்டுள்ளது. அதில் இன்றைய பதிவில் RD திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office Rd Scheme Details in Tamil:

இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் செலுத்தி கால அளவு முடிந்த பிறகு டெபாசிட் செய்த தொகையும் அதற்கான வட்டியும் சேர்த்து வழங்கப்படும்.

தகுதி:

  • 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
  • 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ தபால் அலுவலகத்தில் RD கணக்கை தொடங்கலாம்.

வட்டி:

இந்த திட்டத்திற்கு தற்போது 6.2% வட்டி வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு 3 மாதமும் 30,000 பெறலாம்..  திட்டத்தின் முதிர்வு காலத்தில் Rs.7,00,000/- பெறும் திட்டம்..

முதலீடு:

குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாயும், அதிகபட்ச தொகை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

கால அளவு:

இந்த திட்டத்திற்கான கால அளவு 5 ஆண்டுகள், ஆனால் இந்த திட்டத்தை நீட்டி கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம்.

கடன் வசதி:

இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்து ஒரு வருடம் கழித்து 50%  கடன் பெறும் வசதியும் இருக்கிறது.

எவ்வளவு லாபம் கிடைக்கும்:

இந்த திட்டத்தில் மாதந்தோறும் 6,000 ரூபாய் என்று 5 வருடத்திற்கு டெபாசிட் செய்தால் 4,33,883 ரூபாய் கிடைக்கும்.

555 நாட்களில் Rs.11,22,491/- பெறும் அசத்தலான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement