Post Office Recurring Deposit Interest Rate 2023
இன்றைய காலத்தில் கணவன்,மனைவி இருவருமே சம்பாதிக்கிறார்கள். ஆனால் சம்பாதிக்கின்ற பணத்தை பிற்காலத்திற்கு பயன்படுத்துமாறு சேமித்து வைப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் காலம் முழுவதும் நாம் உழைத்து கொண்டே இருக்க முடியாது. வயதான பிறகு உடலானது ஓய்வு கேட்கும்.அதனால் தான் சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைக்க வேண்டும். அந்த வகையில் நம் பதிவில் சேமிப்பு திட்டங்களை பற்றி தினமும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறை திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
தபால் துறை Rd சேமிப்பு திட்டம் பற்றிய தகவல்:
இந்த Rd திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் மாதம் டெபாசிட் செய்தால் இந்த திட்டத்தில் முதிர்வு காலத்தில் அந்த தொகையும் அதற்கான வட்டியும் சேர்த்து வழங்கப்படும்.
வட்டி எவ்வளவு:
இந்த திட்டத்திற்கான வட்டியாக 6.5% கொடுக்கப்படுகிறது.
தபால் துறையில் மாதந்தோறும் 6167 ரூபாய் வருமானம் தரும் திட்டம்
டெபாசிட் தொகை:
இதில் குறைந்தபட்ச தொகை 100 ரூபாயும், அதிகபட்ச தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
கடன் வசதி:
இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு இடைப்பட்ட காலத்தில் கடன் வாங்கி கொள்ளும் வசதி இருக்கிறது. கடன் எவ்வளவு வாங்கி கொள்ளலாம் என்றால் நீங்கள் டெபாசிட் செய்த தொகையிலிருந்து 90% கடன் வழங்கப்படும்.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்திற்க்கான முதிர்வு ஆண்டு ஐந்து ஆண்டுகள் ஆகும். உங்கள் முதிர்வு காலம் முடிந்த பிறகு இந்த இன்னும் நீட்டிக்க வேண்டும் என்று விரும்பினால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
டெபாசிட் தொகை | 5 வருடத்தில் சேமித்த தொகை | வட்டி | முதிர்வு தொகை |
Rs.5000 | 3 லட்சம் | Rs.54,957 | Rs.3,54,957 |
டெபாசிட் தொகை | 5 வருடத்தில் சேமித்த தொகை | வட்டி | முதிர்வு தொகை |
Rs.5000 | 6 லட்சம் | Rs.2,44,940 | Rs.8,44,940 |
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |