Post Office Recurring Deposit Scheme in Tamil
இன்றைய காலத்தில் சேமிக்க வேண்டும் ஆர்வம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் இதில் சேமிப்பது என்ற சந்தேகம் உள்ளது. சேமித்தால் வட்டி மற்றும் லாபம் கிடைக்கும் என்ற சந்தேகம் உள்ளது. எல்லாருக்கும் உதவுகின்ற வகையில் தபால் துறையில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதில் RD சேமிப்பு திட்டத்தை பற்றி இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க..
Post Office Recurring Deposit Scheme Details in Tamil:
இந்த Rd திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் மாதம் டெபாசிட் செய்தால் இந்த திட்டத்தில் முதிர்வு காலத்தில் அந்த தொகையும் அதற்கான வட்டியும் சேர்த்து வழங்கப்படும்.
வட்டி:
இந்த திட்டத்திற்கான வட்டியாக 5.8% கொடுக்கப்படுகிறது.
முதலீடு:
இதில் குறைந்தபட்ச தொகை 100 ரூபாயும், அதிகபட்ச தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
33,000 ரூபாய் வரை லாபம் தரும் தபால் துறையின் அருமையான திட்டம்..!
கடன் வசதி:
இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு இடைப்பட்ட காலத்தில் கடன் வாங்கி கொள்ளும் வசதி இருக்கிறது. கடன் எவ்வளவு வாங்கி கொள்ளலாம் என்றால் நீங்கள் டெபாசிட் செய்த தொகையிலிருந்து 90% கடன் வழங்கப்படும்.
முதிர்வு ஆண்டு:
இந்த திட்டத்திற்க்கான முதிர்வு ஆண்டு ஐந்து ஆண்டுகள் ஆகும். உங்கள் முதிர்வு காலம் முடிந்த பிறகு இந்த இன்னும் நீட்டிக்க வேண்டும் என்று விரும்பினால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
எவ்வ்ளவு தொகை கிடைக்கும்:
10000 ரூபாய் டெபாசிட் செய்து இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்தால் 5 வருடத்தில் நீங்கள் மொத்தமாக 6 லட்சம் தொகையை டெபாசிட் செய்திருப்பீர்கள். இந்த தொகைக்கு 96,967 ரூபாய் வட்டி வழங்கப்படும், முதலீடு மற்றும் வட்டி தொகை என சேர்த்தால் உங்களுக்கு 6,69,697 ரூபாய் கிடைக்கும்.
அதுவே நீங்கள் இந்த திட்டத்தின் கால அளவான 5 வருடம் முடிந்த பிறகு, மேலும் அடுத்த 5 வருடத்திற்கு டெபாசிட் செய்து வந்தால் மொத்தமாக நீங்கள் 12,00,000/- முதலீடு செய்திருப்பீர்கள். அதற்கு வழங்கப்படும் வட்டி தொகை 4,26,475 ரூபாய் வட்டி கிடைக்கும். முதலீடு மற்றும் வட்டி தொகை என சேர்த்தால் மொத்த தொகையாக உங்களுக்கு 16,26,475/- ரூபாய் கிடைக்கும்.
Lic-யில் ஒரே ஒரு பிரீமியம் செலுத்தினால் போதும் 10 வருடத்தில் Rs.21,25,000 பெறலாம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |