5 ஆண்டில் 7 லட்சம் வரை லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்..!

Advertisement

5 ஆண்டில் 7 லட்சம் வரை லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்..! Post Office Recurring Deposit Scheme in Tamil..!

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இந்தியன் போஸ்ட் ஆபிஸ் தகவல் தொடர்பு மட்டும் இல்லாமல் சிறந்த சேமிப்பு திட்டங்களையும் வழங்குகிறார்கள். அந்த வகையில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சிறு சேமிப்பு மூலம் சேமிக்க வேண்டும் என்று விரும்பினால். உங்களுக்கு போஸ்ட் ஆபிஸின் Recurring Deposit Scheme மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இந்த Recurring Deposit Scheme-யில் முதலீடு செய்து வருகையில் உங்களது முதிர்வு காலம் முடிந்த பிறகு நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்றது போல் உங்களுக்கு அதற்கான வட்டியும் கிடைக்கும். சரி இந்த சேமிப்பு திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், தகுதி என்ன, எவ்வளவு தொகை வரை முதலீடு செய்யலாம், அதற்கு எவ்வளவு வட்டி நிர்ணகிக்கப்பட்டுள்ளது, எப்படி இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் போன்ற அனைத்து விவரங்களையும் இந்த பதிவின் மூலம் நாம் படித்தறியலாம் வாங்க.

யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்:Post Office Recurring Deposit Scheme in Tamil

இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த தொடர் வைப்பு நிதி கணக்கை தொடங்கலாம். மேலும் 10 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் தங்கள் பெற்றோர் சான்றுடன் இந்த சேமிப்பு கணக்கை தொடங்கலாம். 10 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அவர்களது சேமிப்பு கணக்கினை அவர்களே மென்டைன் செய்யலாம். இந்த திட்டத்தில் எந்த ஒரு வயது வரம்பும் இல்லை.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது – Recurring Deposit Interest Rate Tamil:

அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு வருடம் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும். அது அதிகமாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். ஆக 31.01.2023 இன்றி நாளின்படி அஞ்சல் அலுவலகத்தில் இந்த தொடர் வைப்பு நிதி கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் எவ்வளவு என்றால் 5.8% ஆகும். இந்த வட்டில் விகிதத்தில் நீங்கள் சேமிப்பு கணக்கை தொடக்கி இருந்திருந்தால் உங்கள் முதிர்வு காலம் வரை எந்த ஒரு மாற்றமும் இருக்காது.

முதிர்வு காலம் எத்தனை ஆண்டு:

இந்த தொடர் வைப்பு நிதி கணக்கின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த 5 ஆண்டில் நீங்கள் மாதம் மாதம் சேமிப்புக்கும் தொகைக்கு 5.8% என்ற விகிதத்தில் வட்டி வழங்கப்படும்.

எப்படி இந்த திட்டத்தில் இணையலாம்:

உங்கள் ஊரில் அருகில் இருக்கும் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று அங்கு இந்த தொடர் வைப்பு நிதி கணக்கு தொடங்குவதற்க்கான விவரங்களை கேட்டு நீங்கள் இந்த திட்டத்தில் இணையலாம்.

வைப்பு தொகையின் வரம்பு:

நீங்கள் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் தங்களது கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் இந்த தொடர் வைப்பு நிதி கணக்கில் 5 வருடம் வரை முதலீடு செய்யலாம்.

5 ஆண்டில் 7 லட்சம் வரை எப்படி லாபம் பெறுவது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்:

இந்த சேமிப்பு திட்டத்தில் நீங்கள் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை 5 ஆண்டு வரை டெபாசிட் செய்து வரும்போது அதற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று கீழ் உள்ள அட்டைவனையில் பார்க்கலாம் வாங்க.

மாதம் முதலீடு செய்யும் தொகை 5 வருடத்துக்கான மொத்த முதலீடு  வட்டி வட்டியுடன் கிடைக்கும் தொகை
ரூ.100/- ரூ.6,000/- ரூ.969/- ரூ.6,969/-
ரூ.500/- ரூ.30,000/- ரூ.4,848/- ரூ.34,848/-
ரூ.1000/- ரூ.60,000/- ரூ.9,696/- ரூ.69,696/-
ரூ.3000/- ரூ.1,80,000/- ரூ.29,090/- ரூ.2,09,090/-
ரூ.5000/- ரூ.3,00,000/- ரூ.48,483/- ரூ.3,48,483/-
ரூ.10000/- ரூ.6,00,000/- ரூ 96,967/- ரூ.6,96,967/-

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் 4950 ரூபாய் வருமானம் தரும் Post Office சேமிப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement