Post office saving scheme tamil
அஞ்சல் அலுவலகத்தின் மாத சேமிப்பு திட்டமான RD அதாவது ரெக்கரிங் டெபாசிட் ஸ்கீமை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இந்த சேமிப்பு திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதியுடையவர்கள். குறைந்தபட்சம் இந்த திட்டத்தில் நாம் எவ்வளவு முதலீடு செய்யலாம். எப்படி இந்த திட்டத்தில் இணைவது போன்ற முழுமையான தகவல்களை நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மாதம் மாதம் ஒரு குறைந்த அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த திட்டத்தில் நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்து வருகின்றிர்களோ அந்த தொகை மற்றும் அதற்கான வட்டியை இந்த ஸ்கீமின் முதிர்வு காலம் வரும்பொழுது இரண்டையும் சேர்த்து பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸின் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 30000 ரூபாய் சேமித்தால் 1 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்..!
18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவருமே உங்கள் ஊரில் இருக்கும் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று இந்த திட்டத்தில் இணைந்து முதலீடு செய்யலாம்.
இந்த RD அக்கவுண்டை நீங்கள் ஓபன் செய்ய விரும்பினால் குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக நீங்கள் 100 ரூபாய் செலுத்தி இந்த அக்கவுண்டை ஓபன் செய்யலாம்.
இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். மேலும் இந்த திட்டத்திற்கு தற்பொழுது 6.7% வட்டி வழங்கபடுகிறது.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
முதலீட்டு தொகை | முதலீட்டு காலம் | மொத்த முதலீட்டு தொகை | முதலீட்டிற்கு வழங்கப்படும் வட்டி | மெச்சுரிட்டி தொகை |
1000 | ஐந்து வருடம் | 60,000 | 11,365 | 71,365 |
3000 | 1,80,000 | 34,097 | 2,14,097 | |
5000 | 3,00,000 | 56,829 | 3,56,829 | |
10000 | 6,00,000 | 1,13,658 | 7,13,658 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் Rs.50/- சேமித்து ரூ.18.5 லட்சம் வரை பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |