போஸ்ட் ஆஃபீஸின் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் | Post Office Schemes and Rate of Interest in Tamil
Post Office Savings Schemes in Tamil: போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் 9 வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை நாம் இந்த பதிவில் பார்ப்போம். புதிய வட்டி விகிதத்தை தெரிந்து கொண்டு உங்கள் பணத்தை போஸ்ட் ஆஃபிஸில் டெபாசிட் செய்யுங்கள்.
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம், போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்பு போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்களை போஸ்ட் ஆபிஸ் மக்களுக்கு வழங்குகிறது.
அதிலும் சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றிழைக்கப்படும் (PPF), மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டம் மற்றம் சில திட்டங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை என ஒவ்வொரு காலாண்டும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த வட்டி விகித மாற்றமானது அரசு பத்திரங்கள் மூலமாகக் கிடைக்கும் வருவாயினைப் பொருத்து அளிக்கப்படுகிறது.
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு / Post Office Savings Account:
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குக்கு வட்டி விகிதம் 4 சதவீதம் வட்டியினை தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது.இந்த சேமிப்பு கணக்கின் குறைந்தியபட்ச இருப்பு தொகை ரூ.500/-
ஐந்து வருட தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் கணக்குகள் / 5-Year Post Office Recurring Deposit Account (RD):
போஸ்ட் ஆஃபிஸ் ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கு வட்டி விகிதம் 6.7 சதவீதம்.இந்த கணக்குக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை மாதம் ரூ.100/- அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
போஸ்ட் ஆப்பிஸ் டைம் டெபாசிட் கணக்கு:
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் கணக்கு ஒரு வருடம் முதல் 5 வருடம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
1 வருட கணக்கு: 6.9%
2 வருட கணக்கு: 7.0%
3 வருட கணக்கு 7.1%
5 வருட கணக்கு: 7.5%
தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கு / Post Office Monthly Income Scheme Account (MIS):
போஸ்ட் ஆபீஸ் மாந்தந்திர கணக்குக்கு வட்டி விகிதம் 7.4 சதவீதம். இந்த கணக்குக்கு அதிகபட்சம் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் . இதுவே ஜாயிண்ட் கணக்கு என்றால் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் / Senior Citizen Savings Scheme (SCSS):
போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்குக்கு வட்டி விகிதம் 8.2 சதவீதம். 5 வயது முதல் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் சேமிப்பு கணக்கை துவங்கலாம். இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கினை குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் / 15 year Public Provident Fund Account (PPF):
போஸ்ட் ஆபீஸ் PPF கணக்குக்கு வட்டி விகிதம் 7.1 சதவீதம். இந்த கணக்குக்கு குறைந்தபட்சம் தொகையாக ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். மொத்தமாக அல்லது 12 மாத தவணையாகவும் முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் செய்ய முடியும்.
தேசிய சேமிப்பு பத்திர திட்டம் / National Savings Certificates (NSC):
போஸ்ட் ஆபீஸ் NSC கணக்குக்கு வட்டி விகிதம் 7.7 சதவீதம் இந்த கணக்குக்கு குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டம் / Kisan Vikas Patra (KVP):
போஸ்ட் ஆபீஸ் KVP கணக்குக்கு வட்டி விகிதம் 7.5 சதவீதம். இந்த கணக்குக்கு குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
Sukanya Samriddhi Accounts(SSA):
போஸ்ட் ஆபீஸ் SSA கணக்குக்கு வட்டி விகிதம் 8.2 சதவீதம். இந்த கணக்கில் ஆண்டுக்கு அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |