90 நாட்களுக்கு ஒருமுறை Rs.60,000/- வருமானம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்

Advertisement

90 நாட்களுக்கு ஒருமுறை Rs.60,000/- வருமானம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம் – Senior Citizen Saving Scheme Tamil 2023

நண்பர்களுக்கு வணக்கம்.. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 60,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய ஒரு அஞ்சலக சேமிப்பு திட்டத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த அருமையான தகவலை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

Post Office Senior Citizen Saving Scheme:

ஒரு குறிப்பிட்ட தொகையை லாம்சமாக முதலீடு செய்து, அதனுடைய வட்டியை வருமானமாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் அஞ்சல் அலுவலகத்தின் Senior Citizen சேமிப்பு திட்டத்தில் இணையலாம்.

இந்த திட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட இந்திய மக்கள் மட்டுமே இணைய முடியும்.

இந்த சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் ஆகும். அதிகபட்ச தொகை என்று பார்த்தால் மார்ச் 31, 2023 வரை 15 லட்சம் ஆகும். அதுவே ஏப்ரல் 1, 2023-ஆம் தேதி முதல் இந்த திட்டத்தில் நீங்கள் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

மூத்த குடிமக்கள் செம்பு திட்டத்திற்கு தற்பொழுது 8 சதவீதம் வரை வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான வட்டி விக்கிறதாம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும். இருப்பினும் நீங்கள் இந்த திட்டத்தில் இணையும் போது எவ்வளவு வட்டி விதிக்கப்பட்டது அப்போது அதே வட்டி விகிதத்தை தான் உங்கள் கால அளவு வரை நிர்ணகிக்கப்படும்.

இந்த திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் உங்கள் ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகம் மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் இணையலாம்.

இத்திட்டத்தை கால அளவு 5 ஆண்டுகள் ஆகும், இந்த திட்டத்தில் இணைந்த பிறகு ஒவ்வொரு மூணு மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப வட்டி உங்களுக்கு வழங்கப்படும்.

ஐந்து வருடத்திற்கு பிறகு நீங்கள் முதலீடு செய்த தொகையை 100% கேரண்டியுடன் பெறலாம். இந்த திட்டத்தின் கால அளவு முடிந்த பிறகு நீங்கள் விரும்பினால் மேலும் மூன்று வருடம் நீடிக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸ் உள்ள TD Vs MIS இரண்டு திட்டத்தில் எது சிறந்தது.? நீங்கள் எதில் சேமித்தால் பயன்பெறலாம் தெரியுமா..?

இந்த திட்டத்தில் இணைந்த பிறகு உங்கள் கணக்கை இடைப்பட்ட காலத்தின் மூட வேண்டும் என்றால் அதற்கான வசதிகளும் உள்ளது இருப்பினும் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும்.

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்:

முதலீட்டு தொகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் வட்டி மொத்தமாக 5 வருடத்தில் வழங்கப்பட்டிருக்கும் வட்டி மெச்சூரிட்டி தொகை
1 லட்சம் 2,000 40,000 1 லட்சம்
5 லட்சம் 10,000 2 லட்சம்  5 லட்சம் 
10 லட்சம் 20,000 4 லட்சம் 10 லட்சம்
15 லட்சம் 30,000 6 லட்சம் 15 லட்சம்
ஏப்ரல் 1, 2023 பிறகு 
30 லட்சம் 60,000 12,00,000 30,00,000

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
LIC-யில் மாதந்தோறும் 6500 செலுத்தினால் 27 லட்சம் பெறும் திட்டம்..

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement