Post Office Senior Citizen Savings Scheme Account Rules Updated in Tamil
2004-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் மூத்த குடிமக்களின் நலன் கருதி மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இது ஒரு நல்ல பாதுகாப்பான திட்டமாகும். 60 வயதிற்கு மேலே நல்ல வருமானம் வேண்டும் என்றால் இந்த திட்டம் சிறந்தாக இருக்கும். இந்த திட்டத்தில் விதிகளை மாற்றியுள்ளது. அது என்னென்ன விதிகள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
Post Office Senior Citizen Savings Scheme:
தகுதி:
இந்த திட்டத்தில் 60 வயதிற்குமேற்பட்ட தனிநபர், 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு கீழ் உள்ள ஓய்வுபெற்ற சிவில் பணியாளர்கள்,50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு கீழ் உள்ள ஓய்வு பெற்ற பாதுகாப்பு ஊழியர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.
வட்டி:
மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் 8.2% வட்டி கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டின் கடைசி நாளில் அதாவது மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வட்டி செலுத்தப்படுகிறது.முதலீடு தொகை:
ஒரு தனிநபர் இந்த திட்டத்தில் சேர்ந்தால் குறைந்தபட்சம் 1000 ரூபாயும், அதிகபட்சம் 30 லட்சத்திற்கு மிகாமல் டெபாசிட் செய்ய வேண்டும்.
தபால் நிலையத்தில் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் Rs.1,62,647/- பெறும் அருமையான திட்டம்..
முதிர்வு காலம்:
SCSS இன் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இருந்தாலும் இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளது. திட்டத்தை நீட்டிப்பதற்காக, படிவம் பி-ஐ 5 ஆண்டுகள் முடிந்த பிறகு பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் முன்கூட்டியே திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் கணக்குத் தொடங்கி ஒரு வருடத்திற்குப் பிறகு மட்டுமே திரும்ப பெறுதல் அனுமதிக்கப்படுகிறது. ஒருவேளை கணக்கு வைத்திருப்பவர் உயிரிழந்தால் கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கு கட்டணம் அல்லது அபராதம் விதிக்கப்படாது.
எவ்வளவு லாபம் கிடைக்கும்:
நீங்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் 15 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் தற்போதைய வட்டி படி 8.2% கிடைக்கும். இதனை வைத்து பார்க்கும் போது 15 லட்ச டெபாசிட் தொகைக்கு 6 லட்சம் வட்டியாக பெறுவீர்கள்.
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














