Post Office Senior Citizen Saving Scheme in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. போஸ்ட் ஆபீசில் 8 சதவீதம் வட்டியில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 60 ஆயிரம் ரூபாய் வட்டி தரும் ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தின் முழுமையான விவரங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க அது என்ன சேமிப்பு திட்டம், யாரெல்லாம் பயன்பெறலாம், எவ்வளவு முதலீடு செய்யலாம் போன்ற தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl
என்ன சேமிப்பு திட்டம் இது?
குறிப்பாக 60-வது வயதிற்கு மேற்பட்ட மக்கள் தங்களது வாழ்கை தரத்தை நிரந்தரமான ஒரு வருமானத்தின் மூலமாக சிறப்பான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் தான் Post Office Senior Citizen Saving Scheme சரி வாங்க இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்களை படித்திரியலாம்.
Post Office Senior Citizen Saving Scheme 2023:
இந்த திட்டம் ஐந்து வருடங்களுக்கான சேமிப்பு திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தில் ஒரு லம்சமான தொகையை ஒரே ஒரு முறையை டெபாசிட் செய்தால் போதும்.
டெபாசிட் செய்த தொகைக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு வட்டி வழங்கப்படும்.
டெபாசிட் காலம் முடிந்த பிறகு நாம் முதலீடு செய்த தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 வருடத்தில் 2,94,132 ரூபாய் பெறக்கூடிய அருமையான பிக்சட் டெபாசிட் திட்டம்..!
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
இந்த திட்டம் முழுக்க முழுக்க முதியவர்களுக்காக கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் திட்டம் ஆகும்.
60 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அரசு வேலையில் இருந்து VRS வாங்கியவராக இருந்தால் தங்களது 55 வயதில் இருந்தே இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
Defence Service-யில் இருந்து ரிட்டைடு ஆகியிருந்தால் தங்களது 50 வயதில் இருந்தே இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் Joint Account ஓபன் செய்ய விரும்பினால் உங்கள் கணவன் அல்லது மனைவியின் பெயரில் மட்டுமே Joint Account ஓபன் செய்துகொள்ளலாம்.
இந்த திட்டத்தில் சிங்கிள் அக்கௌன்ட் அல்லது ஜோய்ன்ட் அக்கௌன்ட் ஆகியவற்றில் எந்த அக்கௌன்ட் ஓபன் செய்தாலும் அவற்றில் எத்தனை அக்கௌன்ட் வேண்டுமானாலும் ஓபன் செய்து கொள்ளலாம், ஆனால் அந்த அக்கௌன்டையும் செய்து நீங்கள் 30 லட்சம் ரூபாய் வரை தான் டெபாசிட் செய்திருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
- ஆதார் கார்ட்
- போட்டோ
- பான் கார்ட்
மேல் கூறப்பட்டுள்ள மூன்று ஆவணங்கள் இருந்தால் போதும் அஞ்சல் அலுவலகத்தில் மிக எளிதாக அக்கௌன்ட் ஓபன் செய்துகொள்ளலாம்.
எங்கெல்லாம் கணக்கு தொடங்கலாம்?
அஞ்சல் அலுவகத்தில் கணக்கு ஓபன் செய்யலாம் அல்லது தேசியமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கணக்கு திறக்கலாம்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
இந்த திட்டத்தில் குறிந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்து கணக்கு ஓபன் செய்யலாம், அதுவே அதிகபட்சம் என்று பார்த்தால் 30 லட்சம் ரூபாயை முதலீடு முதலீடு செய்யலாம்.
இந்த கணக்கை எப்படி ஓபன் செய்ய முடியும்?
இந்த கணக்கை நாம் 1 லட்சம் ரூபாய்க்கு குறைவாக ஓபன் செய்வதாக இருந்தால் நாம் நேரடியாக பணத்தை கொடுத்து ஓபன் செய்துகொள்ள முடியும்.
அதுவே 1 லட்சம் ரூபாய்க்கு மேல் ஓபன் செய்வதாக இருந்தால் செக் அல்லது DD மூலமாக மட்டுமே ஓபன் செய்ய முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
444 நாட்களில் Rs.5,51,110/- பெறலாம்..! இப்படி ஒரு திட்டமா..?
வட்டி:
இந்த மூத்தகுடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8 சதவீதம் வட்டி வாங்கப்படுகிறது. இந்த வட்டி தொகையானது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தங்களுக்கு வழங்கப்படும்.
எப்போது எல்லாம் இந்த வட்டி வழங்கப்படும்?
மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய நாட்களில் வட்டி வழங்கப்படும்.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
டெபாசிட் தொகை | மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் வட்டி | மொத்தமாக வழங்கப்பட்ட வட்டி | டெபாசிட் தொகை + வட்டி |
1,00,000 | 2,000 | 40,000 | 1,40,000 |
5,00,000 | 10,000 | 2,00,000 | 7,00,000 |
10,00,000 | 20,000 | 4,00,000 | 14,00,000 |
15,00,000 | 30,000 | 6,00,000 | 21,00,000 |
20,00,000 | 40,000 | 8,00,000 | 28,00,000 |
30,00,000 | 60,000 | 12,00,000 | 42,00,000 |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |