மூன்று மாதத்திற்கு ஒரு முறை 61,500 ரூபாய் வருமானம் தரும் தபால் துறை திட்டம்

Advertisement

மூன்று மாதத்திற்கு ஒரு முறை 61,500 ரூபாய் வருமானம் தரும் திட்டம் 

மனிதனாக பிறந்த அனைவருமே பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஓடி ஓடி உழைக்கின்றோம். ஆனால் இன்றைய காலத்தில் சம்பாதித்த பணத்தை விட அதை சேமிப்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால தான் எந்த திட்டத்தில் சேமிப்பது, எந்த திட்டத்தில் சேமித்தால் வருமானம் நன்றாக கிடைக்கும் என்றெல்லாம் சிந்தித்து வருகிறாரார்கள். அப்படி யோசிப்பவர்களுக்கு நம் பதிவில் தினந்தோறும் சேமிப்பு திட்டம் பற்றிய தகவலை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை 61,500 ரூபாய் வருமானம் தர கூடிய திட்டத்தை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தபால் துறையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வருமானம் தர கூடிய திட்டம்:

தபால் துறையில் சீனியர் சிட்டிசன் திட்டத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த திட்டத்தில் ஒரு முறை நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் அந்த தொகைக்கான வட்டியை மூன்று மாதத்திற்கு ஒரு முறை வழங்குவார்கள். டெபாசிட் காலம் முடிந்த பிறகு செலுத்திய தொகையை வழங்கி விடுவார்கள்.

தகுதி:

இந்த திட்டத்தில் நீங்கள் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம். மேலும் கணவன், மனைவி இருவருமே இந்த திட்டத்தில் ஜாயிண்ட் கணக்காகவும் தொடங்கலாம்.

டெபாசிட் தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயும், அதிகபட்சம் 30 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்யலாம்.

கால அளவு:

சீனியர் திட்டத்திற்கான கால அளவு 5 வருடங்கள் கொடுக்கப்படுகிறது.

5 ஆண்டில் வட்டி மட்டும் 3,07,500 ரூபாய் அளிக்கும் தபால் துறை சீனியர் சிட்டிசன் திட்டம் 

வட்டி:

சீனியர் திட்டத்திற்கான 8.2% வட்டியாக வழங்கப்படுகிறது. இந்த வட்டி தொகையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்களது சேமிப்பு கணக்கில் செலுத்துவார்கள்.

Premature Closure: 

இந்த திட்டத்தில் Premature ஆக 1 வருடம் கழித்து close செய்கிறீர்கள் என்றால் உங்களுடைய டெபாசிட் தொகையிலிருந்து 1.5% சார்ஜாக கட் செய்து மீதமுள்ள தொகையை வழங்குவார்கள்.

இந்த திட்டத்தில் Premature ஆக 2 வருடம் கழித்து Close செய்கிறீர்கள் என்றால் உங்களுடைய டெபாசிட் தொகையிலிருந்து 1% சார்ஜாக கட் செய்து மீதமுள்ள தொகையை வழங்குவார்கள்.

எடுத்துக்காட்டாக:

டெபாசிட் தொகை  வட்டி தொகை  மொத்த வட்டி தொகை  மொத்தமாக கிடைக்கும் தொகை 
1 லட்சம் 2,050 41,000 1,41,000
3 லட்சம் 6,150 1,23,000 4,23,000
5 லட்சம் 10,250 2,05,000 7,05,000
10 லட்சம் 20,500 4,10,000 14,10,000
15 லட்சம் 30,750 6,15,100 21,15,500
30 லட்சம் 61,500 12,30,300 42,30,000

 

Lic-யில் 50 லட்சம் கிடைக்கும் அசத்தலான திட்டம்..

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement