தபால் துறையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 5000 சேமித்தால் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Selvamagal Semippu Thittam Interest Rate in Post Office 

பொதுவாக ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சேமிப்பும், சிக்கனமும் மிகவும் முக்கியம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் பார்த்தால் இத்தகைய முறை தெரிந்தாலும் கூட ஒரு சில வீடுகளில் தான் இதனை பின்பற்றுகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக குறிப்பிட்ட பணத்தினை சேமித்து வருகிறார்கள். ஆனால் இவ்வாறு நாம் பணத்தினை வீட்டிலேயே சேமித்து வருவதன் மூலம் எந்த பலனும் கிடைக்காது. அதுவே ஒரு திட்டத்தின் கீழ் பணத்தினை சேமித்து வைப்பதன் மூலம் நமக்கு வட்டி என்பது இலவசமாக கிடைக்கும். அதனால் இன்று உங்களிடம் இருக்கும் குறிப்பிட்ட தொகையினை தபால் துறையில் உள்ள செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு தொகை குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு மொத்தமாக கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 5000:

செல்வமகள் சேமிப்பு திட்டம்

வயது தகுதி:

செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கான திட்டம் என்பதால் இதில் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் தான் இதில் சேர முடியும். மேலும் ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் இந்த திட்டத்தில் சேரலாம்.

5 வருடத்தில் வட்டி மட்டும் 1,34,710 பெற கூடிய அருமையான தபால் துறை திட்டம்….

சேமிப்பு தொகை:

இந்த திட்டத்தில் உங்களுக்கான குறைந்தப்பட்ச சேமிப்பு தொகை 250 ரூபாய் முதல் அதிகப்பட்ச சேமிப்பு தொகை 1,50,000 ரூபாய் வரையிலும் சேமிக்கலாம்.

IOB-யின் SCSS திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டி மட்டும் 12,30,000 3 மாதத்திற்கு ஒரு முறை வரவு

வட்டி விகிதம்%:

செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதமாக 8% வரை வழங்கப்படுகிறது. மேலும் வருடம் தோறும் வட்டி தொகை கணக்கிடப்படும்.

சேமிப்பு காலம்:

தபால் துறையில் வழங்கும் இந்த திட்டத்தில் உங்களுடைய குழந்தைக்கான முதிர்வு காலமாக 21 வருடம் அளிக்கப்படுகிறது. ஆனால் முதல் 15 வருடம் மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது.

எங்கு தொடங்கலாம்:

இந்த சேமிப்பு திட்டத்தினை உங்களுடைய ஊரில் உள்ள தபால் துறை மற்றும் வங்கி என எங்கு வேண்டுமானாலும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையினை வைத்து தொடங்கலாம்.

2 வருடத்தில் Rs. 2,20,442/- கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் புதிய சேமிப்பு திட்டம் 

15 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் அசல் தொகை:

ஒரு பெண் குழந்தை மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி மாதம் 5000 ரூபாய் சேமித்து வந்தால் 15 வருடம் சேமிப்பிற்கு பிறகு வட்டி மற்றும் தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Post Office SSA Scheme Details 
சேமிக்கும் காலம்  மாத சேமிப்பு தொகை  மொத்த சேமிப்பு தொகை  வட்டி தொகை  அசல் தொகை 
15 வருடம் 5000 ரூபாய் 9,00,000 ரூபாய் 17,97,247 ரூபாய் 26,97,247 ரூபாய்

 

தபால் துறையில் 1000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் Rs. 7,34,664 ரூபாய் கிடைக்கும்..

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement