போஸ்ட் ஆபீஸில் 5 வருடத்தில் 6,80,000 ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம்..!

Advertisement

Post Office Time Deposit Details in Tamil

இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியம். பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன. அதாவது வங்கிகள், போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸில் 5 வருடத்தில் 6,80,000 ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டத்தை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதாவது Post Office Time Deposit Scheme பற்றிய விவரங்களை தான் பார்க்கப்போகிறோம். எனவே பணத்தை சேமிக்க நினைக்கும் அனைவரும் இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.

Post Office Time Deposit Scheme in Tamil:

வயது தகுதி:

இத்திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் சேரலாம். இத்திட்டத்தில் தனி அக்கௌன்ட் மற்றும் ஜாயிண்ட் அக்கௌன்ட் என இரண்டுமே திறக்கலாம்.

டெபாசிட் முறை:

இத்திட்டத்தில் நீங்கள் அக்கௌன்ட் திறக்கும் போது மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும். இடைப்பட்ட காலத்தில் டெபாசிட் செய்ய தேவையில்லை.

தபால் துறையில் ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் போதும் 67,750 ரூபாய் பெறக்கூடிய திட்டம்..

 

டெபாசிட் தொகை அளவு:

இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

கால அளவுகள்:

இத்திட்டத்தில் 4 வகையான கால அளவில் நீங்கள் அக்கௌன்ட் திறக்கலாம்.

  1. 1 வருடம் 
  2. 2 வருடம் 
  3. 3 வருடம் 
  4. 5 வருடம்
36 மாதத்தில் 3,83,000/- பெறும் அருமையான திட்டம்..!

 

வட்டி விகிதம்:

கால அளவு வட்டி விகிதம்
1 வருடம்  6.60%
2 வருடம்  6.80%
3 வருடம்  6.90%
5 வருடம்  7%

 

இத்திட்டத்தில் 1 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்..?

கால அளவு  டெபாசிட் தொகை  வட்டி / வருடம்  மொத்த வட்டி  மொத்தமாக கிடைக்கும் தொகை
5 வருடம்  1 லட்சம்  7,185 ரூபாய்  35,929 ரூபாய்  1, 35,929 ரூபாய் 
5 வருடம்  2 லட்சம் 14,371 ரூபாய் 71,858 ரூபாய்  2,71,858 ரூபாய் 
5 வருடம்  3 லட்சம் 21,557 ரூபாய் 1,07,788 ரூபாய்  4,07,7888 ரூபாய்

 

 இதேபோல் நீங்கள் 5 வருட கால அளவில் 5 லட்சம் டெபாசிட் செய்தால் 5 வருடத்திற்கு பிறகு 6,79,647 ரூபாய் பெறலாம். 
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement