Public Provident Fund Scheme in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக நாம் சம்பாதிக்கும் பணம் நமது செலவுகளுக்கே சரியாய் போய்விடும். ஆக நம்மிண்டம் சிறிய அளவில் கூட சேமிப்பு என்பது இருக்காது. இருப்பினும் நமது செலவுகளை குறைத்துக்கொண்டு சிறிய அளவிலாவது சேமித்தோம் என்றால் எதிர்காலத்தில் மிகவும் சிறப்பான வாழ்க்கையை வாழலாம். அதற்கான ஒரு லாங் டைம் சேமிப்பு திட்டத்தை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். அதுவும் 20 வருடத்தில் 50 லட்சம் பணம் சேமிப்பது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன சேமிப்பு திட்டம், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்களை நாம் இப்பொழுது பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸில் 1 வருடத்திற்கு 7.70% வட்டி அளித்து 1,44,903 ரூபாய் தரக்கூடிய சூப்பரான சேமிப்பு திட்டம்..!
PPF Account Details in Tamil:
நம் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடிந்தவரை நாம் முடிந்தவரை பணத்தை சேமிப்பது புத்திசாலித்தனம். எனவே நீண்ட கால சேமிப்பில் அதிக வருமானம் தரும் சேமிப்புத் திட்டங்களை சேமிப்பது மிகவும் சிறந்தது. அந்தவகையில் PPF முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது ஒரு அஞ்சலக சேமிப்பு திட்டம் ஆகும்.
இந்த முதலீட்டு திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீட்டு ஆண்டுகள் 15 வருடங்கள் ஆகும். உங்களுக்கு விரும்பும் இருந்தால் 15 வருட முதலீட்டு காலம் முடிந்தபிறகு வேண்டும் என்றால் கூடுதலாக 5 ஆண்டுகளை நீட்டித்துக்கொள்ளலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. நாம் முதலீடு செய்து வரும் தொக்கு கூட்டு வட்டியும் கிடைக்கும். அதாவது வட்டிக்கே வட்டி கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் ரூ.9,250 வருமானம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்!!! என்ன தெரியுமா?
20 வருடத்தில் 50 லட்சம் பெறுவது எப்படி?
மாதம் மாதம் நாம் 10 ஆயிரம் ரூபாயை 20 வருடத்திற்கு முதலீடு செய்து வாந்தால், நாம் முதலீடு செய்த பணம் எவ்வளவு இருக்கும் என்று பார்த்தால் 24 லட்சம் ரூபாய் இருக்கும். இந்த தொகைக்கு 7.1% சதவீதம் வட்டி என்று பார்த்தால் வட்டி மட்டுமே 29,26,631/- ரூபாய் கிடைக்கும். ஆக 20 வருடத்திற்கு பிறகு மொத்த மெச்சுரிட்டி தொகை என்று பார்த்தால் 53,26,361/- ரூபாய் வட்டியும் முதலுமாக கிடைக்கும்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |