Rs.166/- சேமித்தால் 15 லட்சம் மொத்தமாக பெறலாம் – PPF Scheme Full Details and Maturity Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. தினமும் 166 ரூபாய் செலுத்தி 15 லட்சம் ரூபாயை எப்படி பெறலாம் என்று இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க. போஸ்ட் ஆஃபீஸ் அல்லது வங்கியில் நீங்கள் ஏதாவது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் Public Provident Fund ஸ்கீமை ஓபன் செய்யலாம். சரி வாங்க இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் படித்தறியலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl
Public Provident Fund Scheme in Tamil:
இந்த ஸ்கீமில் நீங்கள் ஒவ்வொரு மாதம் டெபாசிட் செய்யும் தொகையை ஸ்கீமினுடைய கால அளவு முடிந்த பிறகு வட்டியுடன் 100 சதவீதம் நீங்கள் திரும்ப பெறலாம்.
யாரெல்லாம் இந்த PPF திட்டத்தில் சேரலாம் என்றால் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் சேரலாம்.
எங்கெல்லாம் இணையலாம் என்றால் உங்கள் ஊரில் அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு நேரடியாக சென்று இணையலாம்.
18 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளின் பெயரில் அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இந்த திட்டத்தில் இணையலாம்.
ஒரு நபர் தனது வாழ்நாளில் ஒரே ஒரு PPF கணக்கை மட்டும் தான் ஓபன் செய்ய முடியும்.
Public Provident Fund Scheme-யின் கால அளவு 15 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் நீங்கள் விரும்பினால் 15 வருடங்களுக்கு பிறகு இந்த ஸ்கீமைல் நீடிக்க விரும்பினால் ஒவ்வொரு 5 வருடங்களுக்கு பிறகு நீங்கள் இந்த திட்டத்தை நீட்டித்துக்கொள்ளலாம்.
இந்த ஸ்கீமில் நீங்கள் அக்கௌன்ட் ஓபன் செய்ய விரும்பினால் குறைந்தபட்சம் டெபாசிட் தொகை ஒரு நிதியாண்டில் 500 ரூபாய் டெபாசிட் செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
இந்த திட்டத்திற்கு தற்பொழுது வழங்கப்படும் வட்டி விகிதம் 7.10 சதவீதம் ஆகும்.
மேலும் இந்த திட்டத்தில் Loan Facility, Withdrawal Facility, Nomination Facility, Account Transfer Facility போன்ற வசதிகள் உள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்..! இத்திட்டத்தில் யாரெல்லாம் பயனடைவார்கள்..?
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
ஒவ்வொரு நாளும் 166 ரூபாய் விகிதம் ஒரு மாதத்திற்கு 5000 ரூபாய் டெபாசிட் செய்தால். இந்த ஸ்கீமினுடைய கால அளவான 15 வருடத்தில் மொத்தம் 9,00,000 ரூபாயை டெபாசிட் செத்திருப்பீர்கள். அதற்கு வழங்கப்படும் வட்டி 6,77,840/- ரூபாய் வழங்கப்படும். ஆக நீங்கள் 15 வருடம் செய்த டெபாசிட் தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகிய இரண்டியும் சேர்த்து உங்களுடைய மெச்சுரிட்டி தொகையாக 15,77,840/- ரூபாய் வழங்குவார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.399-ல் ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு முழு விவரங்கள் இதோ..!
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |