போஸ்ட் ஆபீசில் மாதம் 3,000 ரூபாய் செலுத்தினால் போதும் 15,49,435 ரூபாய் பெறக்கூடிய சேமிப்பு திட்டம்..!

Advertisement

PPF Scheme in Post Office 

போஸ்ட் ஆபீஸ் என்பது அனைவருடைய ஊரிலும் கட்டாயமாக இடம் பெற்றிருக்க கூடிய ஒன்றாக உள்ளது. இந்த போஸ்ட் ஆபீசில் மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் இடம் பெற்றிருக்கிறது. இத்தகைய திட்டங்களில் நமக்கு பெரும்பாலும் தெரிந்த ஒரு திட்டம் என்றால் அது RD மற்றும் சீனியர் சிட்டிசனிற்கான திட்டம் ஆகும். ஆனால் இத்தகைய திட்டங்கள் மட்டும் இல்லாமல் நிறைய திட்டங்கள் இவற்றை விட அதிகமான வட்டி விகிதங்களை கொண்டுள்ளது திட்டங்கள் இடம் பெற்றிருக்கிறது. அந்த வகையில் இன்று போஸ்ட் ஆபீசில் உள்ள ஒரு திட்டமான PPF திட்டத்தினை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொண்டு அதில் எவ்வாறு பயன் அடைவது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் 2023:

வயது:

இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம். ஆனால் 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் ஒரு நபர் ஒரு கணக்கை மட்டுமே ஓபன் செய்ய முடியும்.

சேமிப்பு தொகை:

போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகை 500 ரூபாய் ஆகும். அதுவே அதிகப்பட்ச தொகை என்று பார்த்தால் 1,50,000 ரூபாய் ஆகும்.

வட்டி விகிதம்:

இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதமாக 7.10% வரை அளிக்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

PPF திட்டத்திற்கான முதிர்வு காலம் 15 வருடம் ஆகும்.

  1. Extension With Deposit
  2. Extension Without Deposit

மேலே சொல்லப்பட்டுள்ள முதல் முறையினை நீங்கள் தேர்வு செய்தால் அடுத்த 5 வருடமும் தொடர்ச்சியாக பணம் செலுத்த வேண்டும்.

அதுவே 2-வது முறையினை தேர்வு செய்தால் அடுத்த 5 வருடம் பணம் செலுத்த வேண்டாம்.

New Scheme👇👇 மத்திய அரசின் அசத்தலான திட்டம்..  7 வருடத்தில் Rs.15,14,500/- பெறலாம்.. 

15 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் தொகை எவ்வளவு:

மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி ஒரு நபர் இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 3,000 ரூபாய் செலுத்தினால் 15 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PPF Scheme in Post Office 2023
முதிர்வு காலம்  மாதாந்திர சேமிப்பு தொகை  வட்டி தொகை  மொத்த சேமிப்பு  தொகை  அசல்  தொகை 
15 வருடம் 3,000 ரூபாய் 4,06,704 ரூபாய் 5,40,000 ரூபாய் 9,46,704 ரூபாய்

 

அதுவே நீங்கள் இந்த திட்டத்தில் Extension With Deposit என்ற முறையினை தேர்வு செய்து இருந்தால் அடுத்த 5 வருடமும் இதே மாதிரி பணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

முதிர்வு காலம்  மாதாந்திர சேமிப்பு தொகை  வட்டி தொகை  மொத்த சேமிப்பு  தொகை  அசல்  தொகை 
5 வருடம் 3,000 ரூபாய் 4,22,731 ரூபாய் 11,26,704 ரூபாய் 15,49,435 ரூபாய்

 

New Scheme👇👇 தபால் துறையில் 90 நாட்களுக்கு ஒரு முறை 60,000 ரூபாய் வருமானம் தரும் அருமையான திட்டம் 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement