தபால் துறையில் 5000 ரூபாய் செலுத்தினால் 15,77,840 ரூபாய் பெறும் திட்டம்..

Advertisement

PPF Scheme in Post Office in Tamil

இன்றைய கால கட்டத்தில் இருவரும் சம்பாதித்தால் மட்டும் போதாது. சம்பாதிக்கின்ற பணத்தை கண்டிப்பா சேமிக்க வேண்டும். சேமித்தால் மட்டுமே எதிர்காலத்தில் பொருளாதார நிலையை சமாளிக்க முடியும். பெரும்பாலானவர்கள் சேமிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் இதில் சேமிக்க வேண்டும் என்ற புரிதல் இல்லை. சில நபர்களிடம் அதிக தொகையை சேமிக்க முடியாது. ஆனாலும் சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தபால் துறையில் நிறைய வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்றான PPF திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

PPF Scheme in Post Office:

வயது தகுதி:

18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த  திட்டத்தில் பயன் அடையாலம். மைனர் குழந்தையின் பெயரிலும் அவர்களின் பெற்றோர்களின் பெயர்களில் ஓபன் செய்யலாம்.

முதலீடு:

குறைந்தபட்சம் டெபாசிட் தொகையாக 500 ரூபாயாகவும், அதிபட்சமாக 1, 50,000 டெபாசிட் செய்யலாம்.

வட்டி:

இந்த திட்டத்தில் 7.10% வட்டி அளிக்கப்படுகிறது.

400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம்.! மார்ச் 31 கடைசி தேதி..

முதிர்வு காலம்:

இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் தங்களுடைய முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் தங்களுடைய சேமிப்பு கணக்கினை தொடர வேண்டும் என்று நினைத்தால் அதன் பிறகு 5 ஆண்டுகள் வரை தங்களுடைய சேமிப்பு கணக்கினை நீட்டித்து கொள்ளலாம். அதேபோல் 7 ஆண்டுகள் முதலீட்டிற்கு பிறகு தங்களுடைய சேமிப்பு தொகையை எடுத்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் லாபம் எவ்வளவு கிடைக்கும்:

எடுத்துக்காட்டாக இந்த  திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் என்று 15 வருடத்திற்கு முதலீடு செய்தால் 9 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கான வட்டியாக 6,77,840 கொடுக்கிறார்கள். இதனை 15 வருடத்திற்கு முடித்து கொண்டால் 15,77,840 ரூபாய் கிடைக்கும்.

அதுவே இந்த திட்டத்தை 15 வருடத்தில் முடித்து கொள்ளாமல் extension ஆப்ஷனை செலக்ட் செய்து வித் Deposit ஆப்ஷன் கொடுத்திருந்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று பார்ப்போம்.

ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் என்று 15 வருடத்திற்கு முதலீடு செய்தால் 15,77,840 ரூபாய் கிடைக்கும். மறுபடியும் 5 வருடத்திற்கு டெபாசிட் செய்தால் வட்டியாக 7,04,553 ரூபாய் கொடுப்படுகிறது. 20 வருடத்திற்கு பிறகு 25,82,393 ரூபாய் கிடைக்கும்.

அதுவே இந்த திட்டத்தை 15 வருடத்தில் முடித்து கொள்ளாமல் extension ஆப்ஷனை மட்டும் செலக்ட் செய்தால் 22,23,363 ரூபாய் கிடைக்கும்.

BOB பேங்கில் 1 லட்சம் செலுத்தினால் போதும் Rs. 1,44,994 பெறக்கூடிய அருமையான திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement