Pradhan Mantri Shram Yogi Maandhan Scheme
நம்முடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் என்பது அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. இத்தகைய முறையினை கருத்தில் கொண்டு அனைவரும் அவர் அவரால் முடிந்த பணத்தினை சம்பாதித்து வருகிறார்கள். இவ்வாறு நாம் சம்பாதிக்கும் பணம் ஆனது நம்முடைய அன்றாட தேவைக்காக மட்டும் இல்லாமல் எதிர்கால தேவைக்காகவும் இருக்க வேண்டும் என்பதை யோசித்து அதற்கு ஏற்றவாறு செயல்படுவது முக்கியமான ஒன்று. இதனை நாம் வெறும் திட்டமிடுதலோடு மட்டும் விட்டு விடாமல் ஒரு திட்டத்தின் கீழ் சேர்ந்து பணத்தினை சேமிக்கவும் தொடங்கி விட வேண்டும். அந்த வகையில் இன்று இவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்ட Pradhan Mantri Shram Yogi Maandhan ஸ்கீம் பற்றிய முழு விவரங்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
PM SYM Pension Scheme:
இந்த பென்ஷன் திட்டத்தில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 40 வயதிற்கு உட்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் சேரலாம்.
மேலும் உங்களுடைய மாதம் வருமானம் ஆனது மாதம் 15,000 ரூபாக்கு கீழ் இருக்க கூடாது.
New Scheme👇👇 தபால் துறையில் 90 நாட்களுக்கு ஒரு முறை 60,000 ரூபாய் வருமானம் தரும் அருமையான திட்டம்
சேமிப்பு தொகை:
அதேப்போல் இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்க விரும்பும் பணம் ஆனது உங்களுடைய வயதினை பொறுத்து தான் அமையும். அதற்கான அட்டவணை ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையின் சம பங்கினை அரசு உங்களுக்கு வழங்கும். இதில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை என்பது 55 ரூபாயிலிருந்து 200 வரை உள்ளது.
மாதாந்திர பென்ஷன் தொகை:
இந்த பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தில் 19 வயதில் உள்ள ஒரு நபர் 58 ரூபாயினை மாதம் தோறும் 60 வயது வரை செலுத்த வேண்டும்.
ஆகவே நீங்கள் மாதந்தோறும் 58 ரூபாய் செலுத்தினால் இதே தொகையினை அரசும் உங்களுடைய பெயரில் செலுத்தி வரும். அப்படி என்றால் மொத்த தொகையாக 116 ரூபாய் வரும்.
60 வயதிற்கு பிறகு உங்களுடைய பென்ஷன் தொகையாக மாதம் 3,000 ரூபாய் பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் இறந்து விட்டாலும் கூட இதில் பாதி தொகையான 1,500 ரூபாய் கிடைக்கும்.
New Scheme👇👇 போஸ்ட் ஆபீசில் மாதம் 3,000 ரூபாய் செலுத்தினால் போதும் 15,49,435 ரூபாய் பெறக்கூடிய சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |