வெறும் Rs.20/- செலுத்தி Rs.2,00,000/- பெறலாம் அருமையான மத்திய அரசு திட்டம்..!

Rs.20/- செலுத்தினால் Rs.2,00,000/- பெறலாம் அருமையான அரசு திட்டம்..! Pradhan Mantri Suraksha Bima Yojana Insurance Scheme New Update Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்.. ஒரு வருடத்திற்கு வெறும் 20 ரூபாய் செலுத்தி 2 லட்சம் தரக்கூடிய ஒரு அருமையான பாலிசியை பற்றி தான் இன்றிய பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். இது ஒரு மத்திய அரசி திட்டம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த பாலிசியை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு கொண்டு வந்த ஒரு ஸ்கீம் தான் Pradhan Mantri Suraksha Bima Yojana. இந்த ஸ்கீமில் ஒரு வருடத்திற்கு வெறும் 20 ரூபாய் செலுத்தி 2 லட்சத்திற்க்கான விபத்து காப்பீடு எடுக்கலாம். சரி வாங்க இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களை இப்பொழுது நாம் படித்தறியலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Pradhan Mantri Suraksha Bima Yojana Insurance Scheme:Pradhan Mantri Suraksha Bima Yojana

இந்த பாலிசி திட்டத்தில் சேர விரும்புபவர்கள் உங்கள் ஊரில் உள்ள வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று ஜோன் பண்ணலாம்.

இந்த ஸ்கீமில் நீங்கள் இணைவதற்கு கண்டிப்பாக உங்களிடம் ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். இந்த சேமிப்பு கணக்கு எதற்கு என்றால் இந்த ஸ்கீமினுடைய இயர்லி பிரீமியம் அதாவது வருடத்திற்கு ஒவ்வொரு முறை 20 ரூபாய் உங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து ஆடோடெபிட் முறையில் வசூல் செய்துகொள்வார்கள். ஆக இதன் காரணமாகவே பாலிசி தாரருக்கு கண்டிப்பாக ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் உங்களது சேமிப்பு கணக்கில் 20 ரூபாய் பிடித்துக்கொள்வதினால், இந்த பாலிசியானது ஒவ்வொரு வருடமும் ரினிவல் செய்யப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Lic-யில் Rs.23,05,000 வரை பெறக்கூடிய அருமையான பாலிசி..!

பாலிசி தாரர் விபத்து மூலமாக இறந்தார்கள் என்றால் அவர்களுடைய நாமினிக்கு 2 லட்சம் ரூபாய் வழங்குவார்கள்.

இந்த பாலிசியை வாங்குவதற்கான வயது தகுதி என்னவென்றால் உங்களுடைய 18 வயதில் இருந்து 70 வயது வரை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை வாங்கலாம்.

ஒரு நபர் ஒரேயொரு பாலிசியை மட்டும் தான் வாங்க முடியும். ஒன்றுக்குமேற்பட்ட பாலிசியை இந்த திட்டத்தில் நீங்கள் வாங்க முடியாது.

பாலிசி தாரர் இன்று இந்த பாலிசியை வாங்கிவிட்டு நாளை எதிர்பாராத விதமாக இருந்துவிட்டார்கள் என்றால். அவர்களுடைய நாமினிக்கு 2 லட்சம் ரூபாய் பெறலாம்.

இந்த பாலிசியை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மூடலாம். அதேபோல் எப்போது வேண்டுமானலும் திறக்கலாம்.

மேலும் விபத்து மூலமாக இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு கால்களை இழந்தால் இந்த பாலிசியில் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

அதேபோல் விபத்து மூலமாக ஒரு கண், ஒரு கை, ஒரு கால இழந்தால் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

எந்தந்த விதமான இறப்புகள் இந்த பாலிசி ஏற்றுக்கொள்கிறது என்றால் Road Accident, Rail Accident, Boat Accident, Air Accident போன்றவற்றிக்கு இந்த பாலிசி மூலமாக 2 லட்சம் ரூபாய் வரை கிளைம் செய்துகொள்ளலாம்.

அதேபோல் பூகம்பம், மழை வெள்ளம் இது போன்ற விஷயங்களால் இறந்தால் கூட இந்த பாலிசி மூலமாக 2 லட்சம் ரூபாய் வரை கிளைம் செய்துகொள்ளலாம்.

மேலும் பாம்பு கடித்து இறந்தாலோ, மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தாலும் இந்த பாலிசி மூலமாக 2 லட்சம் ரூபாய் வரை கிளைம் செய்துகொள்ளலாம்.

இந்திய குடிமக்கள் மட்டும் இல்லாமல் Non Resident Indian (NRI)-ம் இந்த பாலிசியை வாங்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இரண்டே ஆண்டுகளில் Rs.1,41,000/- வட்டி தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → Scheme in Tamil