Pradhan Mantri Vaya Vandana Yojana
நமது வாழ்க்கையின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்காக நாமும் இரவு பகல் பார்க்காமல் உழைத்து கொண்டிருக்கிறோம். நாம் இப்படி எத்தணை வயது வரைக்கும் உழைக்க முடியும் சொல்லுங்க ஒரு 60 வயது வரைக்கும் தான் உடலால் உழைக்க முடியும். அதன் பிறகு என்ன செய்வது சம்பாதிக்க முடியாது என்பதால் அதற்கான வழிகளை தேட வேண்டும். அதாவது நீங்கள் சம்பாதிக்கும் பந்தை பிற்காலத்தில் வருமானம் தரும் அளவிற்கு ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்ககளுக்கும் உதவும் வகையில் பிரதான மந்திரி வய யோஜனா திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
Pradhan Mantri Vaya Vandana Yojana:
தகுதி:
இந்த திட்டத்தில் பயன் அடைவதற்கு இந்திய குடிமக்கள் அனைவரும் பயன் அடையாளம். மேலும் 60 வயதிற்கு மூத்த குடிமக்கள் தான் பயன் அடைய முடியும்.
பாலிசி காலம்:
இந்த திட்டத்திற்கான கால அளவு 10 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- வாங்கி கணக்கு அட்டை
- பான் கார்டு
- முகவரி அட்டை
- வருமான சான்று
- ஓய்வு பெற்ற ஆவணம்
பென்சன் வழங்கும் முறை:
இந்த திட்டத்தில் வழங்கும் பென்ஷனை மாதந்தோறும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, 6 மாதத்திற்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை போன்ற முறைகளில் பென்ஷனை வழங்குகிறார்கள். நீங்கள் செலக்ட் செய்யும் ஆப்ஷனை பொறுத்து பென்சன் வழங்குவார்கள்.
பென்ஷன் டெபாசிட் செய்யும் தொகை:
முதலீட்டு தொகை | மாதந்தோறும் | 3 மாதத்திற்கு ஒரு முறை | 6 மாதத்திற்கு ஒரு முறை | வருடத்திற்கு ஒரு முறை |
குறைந்தபட்சம் | ரூ.1,62,162 | ரூ.1,61,074 | ரூ.1,59,574 | ரூ.1,56,658 |
அதிகபட்சம் | ரூ.15,00,000 | ரூ.14,89,933 | ரூ.14,76,064 | ரூ.14,49,086 |
பென்ஷன் எவ்வளவு வழங்குகிறார்கள்:
பென்ஷன் தொகை | மாதந்தோறும் | 3 மாதத்திற்கு ஒரு முறை | 6 மாதத்திற்கு ஒரு முறை | வருடத்திற்கு ஒரு முறை |
குறைந்தபட்சம் முதலீட்டிற்கு | ரூ.1,000 | ரூ.3,000 | ரூ.6,000 | ரூ.12,000 |
அதிகபட்சம் முதலீட்டிற்கு | ரூ.9,250 | ரூ.27,750 | ரூ.55,500 | ரூ.1,11,000 |
தபால் துறையில் 90 நாட்களுக்கு ஒரு முறை 60,000 ரூபாய் வருமானம் தரும் அருமையான திட்டம்
வட்டி:
- மாதந்தோறும் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்தால் 7.40% வட்டி
- 3 மாதத்திற்கு ஒரு முறை என்ற ஆப்ஷனை செலக்ட் செய்தால் 7.45%
- 6 மாதத்திற்கு ஒரு முறை என்ற ஆப்ஷனை செலக்ட் செய்தால் ஆப்ஷனை தேர்வு செய்தால் 7.52% வட்டி
- வருடத்திற்கு ஒரு முறை என்ற ஆப்ஷனை செலக்ட் செய்தால் 7.66% வட்டியை வழங்குகிறது.
வருமானம் எவ்வளவு கிடைக்கும்:
டெபாசிட் செய்த தொகை | மாதந்தோறும் வழங்கும் பென்சன் தொகை | 10 வருடத்தில் பென்சன் தொகை | மெச்சூரிட்டி தொகை |
Rs.1,62,162/- | Rs.1000/- | Rs.1,20,000/- | Rs.1,62,162/- |
Rs.2,00,000/- | Rs.1233/- | Rs.1,48,000/- | Rs.2,00,000/- |
Rs.5,00,000/- | Rs.3083/- | Rs.3,70,000/- | Rs.5,00,000/- |
Rs.10,00,000/- | Rs.6166/- | Rs.7,40,000/- | Rs.10,00,000/- |
Rs.15,00,000/- | Rs.9250/- | Rs.11,10,000/- | Rs.15,00,000/- |
இந்த திட்டத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து ஜாயிண்ட் கணக்காக 20 லட்சம் டெபாசிட் செய்தால் அவர்களுக்கு மாதம் மாதம் ரூ.12,332/- பென்ஷன் வழங்கப்படும்.
போஸ்ட் ஆபீசில் மாதம் 3,000 ரூபாய் செலுத்தினால் போதும் 15,49,435 ரூபாய் பெறக்கூடிய சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |