ஒவ்வொரு மாதமும் 18,500 ரூபாய் வருமானம் தரும் LIC-யின் திட்டம்..

Advertisement

PMVVY Scheme Interest Rate 2023 in Tamil

அரசு 60 வயது மேற்பட்டவர்களுக்கு மூத்த குடிமக்களுக்கான அரசு மானியம் பெறும் ஓய்வூதியத் திட்டமான பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜா திட்டத்தை எல்ஐசி நிர்வகித்து வருகிறது. இந்த பென்ஷன் திட்டம் குறித்த தகவலை பற்றி தான் படித்து தெரிந்து கொள்ள போகிறோம். இந்த திட்டத்தை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

PMVVY  Scheme Details in Tamil:

2,000 ரூபாய் செலுத்தினால் போதும் 3,25,000 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்… 

தகுதி:

60 வயதத்திற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டும் தான் பயன் பெற முடியும்.

முதிர்வு ஆண்டு:

இந்த திட்டத்தில் கால அளவு 10 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் பென்சன் தொகையை 4 விதமாக வழங்குகிறார்கள். மாதம் மாதம் உள்ளது மூன்று மாதத்திற்கு ஒரு முறை, 6 மாதத்திற்கு ஒரு முறை உள்ளது வருடத்திற்க்கு ஒரு என்ற ஆப்ஷன்களை வழங்குகிறார்கள். நீங்கள் எந்த ஆப்ஷனை செலக்ட் செய்கிறீர்களோ அதை பொறுத்து பென்ஷன் தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்:

முதலீட்டு தொகை மாதந்தோறும்  3 மாதத்திற்கு ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை வருடத்திற்கு ஒரு முறை 
குறைந்தபட்சம் ரூ.1,62,162 ரூ.1,61,074 ரூ.1,59,574 ரூ.1,56,658
அதிகபட்சம் ரூ.15,00,000 ரூ.14,89,933 ரூ.14,76,064 ரூ.14,49,086

 

பென்சன் எவ்வளவு:

பென்ஷன் தொகை மாதந்தோறும் 3 மாதத்திற்கு ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை வருடத்திற்கு ஒரு முறை
குறைந்தபட்சம் முதலீட்டிற்கு ரூ.1,000 ரூ.3,000 ரூ.6,000 ரூ.12,000
அதிகபட்சம் முதலீட்டிற்கு ரூ.9,250 ரூ.27,750 ரூ.55,500 ரூ.1,11,000

 

மாதந்தோறும் 420 ரூபாய் செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் பெறும் அரசின் திட்டம்

வட்டி:

இந்த திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் மாதந்தோறும் என்ற  ஆப்ஷனை செலக்ட்  செய்தால் உங்களுக்கு 7.40% வட்டியும், 3 மாதத்திற்கு ஒரு முறை என்ற  ஆப்ஷனை செலக்ட்  செய்தால் 7.45% வட்டியும், 6 மாதத்திற்கு ஒரு முறை என்ற  ஆப்ஷனை செலக்ட்  செய்தால்  ஆப்ஷனை தேர்வு செய்தால் 7.52% வட்டியும்,வருடத்திற்கு ஒரு முறை என்ற  ஆப்ஷனை செலக்ட் செய்தால் 7.66% வட்டியும் வழங்குகிறது. 

இந்த திட்டத்தில் வருமானம் எவ்வளவு கிடைக்கும்:

டெபாசிட் செய்த தொகை  மாதந்தோறும் வழங்கும் பென்சன் தொகை  10 வருடத்தில் பேஷன் தொகை  மெச்சூரிட்டி தொகை 
Rs.1,62,162/- Rs.1000/- Rs.1,20,000/- Rs.1,62,162/-
Rs.2,00,000/- Rs.1233/- Rs.1,48,000/- Rs.2,00,000/-
Rs.5,00,000/- Rs.3083/- Rs.3,70,000/- Rs.5,00,000/-
Rs.10,00,000/- Rs.6166/- Rs.7,40,000/- Rs.10,00,000/-
Rs.15,00,000/- Rs.9250/- Rs.11,10,000/- Rs.15,00,000/-

 

இந்த திட்டத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து ஜாயிண்ட் கணக்காக  30 லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு மாதம் மாதம் ரூ.18,500/- பென்ஷன் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் உங்களுக்கு Maturity Benefits எதுவும் வழங்கப்படுவதில்லை. நீங்கள் டெபாசிட் செய்த தொகையை இந்த திட்டத்தின் கால அளவான 10 வருடம் முடிந்த பிறகு நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்திருந்தீர்களோ அந்த தொகையை மட்டும் மீண்டும்  பெற்றுக்கொள்ளலாம்.

வெறும் 42 ரூபாய் செலுத்தினால், Rs.5,30,000/- பெறலாம்..! உட்றாதீங்க நண்பர்களே..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement