மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டம் 2022-2023..! | Prathama Manthiri Awas Yojana scheme in tamil

pradhan mantri awas yojana thittam.jpg

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் 2022-2023 | Prathama Manthiri Awas Yojana Scheme in Tamil

அனைவருக்கும் இலட்சிய கனவாக வீடு கட்டுவது இருக்கிறது. இப்போது உள்ள கால கட்டத்தில் வீடு கட்டுவது என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பொருளாதார நிலை தான். இருந்தாலும் எல்லோருமே சொந்தமாக வீடு கட்டலாம். இதற்கு உதவியாக இருக்கிறது மத்திய அரசின் திட்டம்.

சொந்தமாக வீடு கட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உதவியாக இருக்கிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே 2024 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பது தான். இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதியுடையவர்கள், எவ்வளவு மானியம் என்று இந்த பதிவை முழுதாக படித்து சொந்தமாக வீடு கட்ட ஆரம்பியுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ 5 வருடத்தில் முதிர்வு தொகை கிடைக்கும் அருமையான மூன்று சேமிப்பு திட்டங்கள்

பிரதான் மந்திரி யோஜனா திட்டம் 2022-2023:

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

பிரதான் மந்திரி யோஜனா திட்டம் 2015 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் இரண்டு வகை திட்டங்கள் இருக்கின்றது.

 1. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் அர்பன்
 2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கிராமின்

நிபந்தனைகள்:

குடும்பத்தின் உறுப்பினர்களின் பெயர்கள் வேறு எந்த வீடு வழங்கும் திட்டத்திலும் இருக்க கூடாது.

இந்த திட்டத்தின் அம்சம்:

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

இந்த திட்டத்தில் 25 சதுர மீட்டர் அல்லது 269 சதுர அடிகள் இடம் இருக்க வேண்டும்.

ஒரு வரவேற்பறை, பெட்ரூம், சமையலறை, பாத்ரூம் போன்றவை இடம் பெற்றிருக்கும்.

இந்த திட்டத்தின் மானிய தொகை 4 தவணையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

தகுதியுடையவர்கள்:

 • நடுத்தர வருமானக் குழுக்கள் (MIG I) ஆண்டு வருமானம் ரூ. 6 -12 லட்சம்
 • நடுத்தர வருமானக் குழு (MIG II) ஆண்டு வருமானம் ரூ. 12 -18 லட்சம்
 • குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் (எல்ஐசி) ஆண்டு வருமானம் ரூ. 3 -6 லட்சம்
 • பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு (EWS) ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம்

மானிய தொகை:

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச மானிய தொகையாக 2.67 லட்சம் வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:

 1. ஆதார் கார்டு
 2. வங்கி புத்தகம்
 3. முகவரி சான்று
 4. வருமான சான்றிதழ்
 5. சொந்தமாக இடம் இருக்க வேண்டும் அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ தபால் துறையில் அருமையான காப்பீட்டு திட்டத்தில் மாத தொகையாக 50 ரூபாய் செலுத்தினால் போதும்.

மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 Schemes