Post Office Premature Account Amount in Tamil
மனிதர்கள் பணத்தை சம்பாதிப்பது முக்கியமில்லை, எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமித்து வைத்து அவசியமானது. அதனால் தான் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தபால் துறையில் பல திட்டங்கள் உள்ளது. அது போல தபால் துறையில் வருடத்திற்கு ஒரு முறை வட்டி உயர்த்தப்படுகிறது. தபால் துறையில் உள்ள கணக்கில் 5 வருட கால அளவு உள்ளது என்றால் அதை Premature ஆக Close செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
RD Scheme:
தபால் துறையில் RD திட்டத்திற்கு 6.2% வட்டி வழங்குகிறது. இத்தனின் கால அளவு 5 வருடமாகவும். ஆனால் இதனை Premature ஆக 3 வருடம் கழித்து Close செய்து கொள்ளலாம். அப்படி Close செய்தால் 4% வட்டி மட்டுமே வழங்குகிறது. நீங்கள் முதலீடு செய்த தொகை மற்றும் 4% சேர்த்து வழங்குகிறது.
மாதம் Rs.5,325/- ரூபாய் வருமானம் தரும் அசத்தலான தபால் நிலைய சேமிப்பு திட்டம்..!
Time deposit scheme:
இந்த திட்டத்தை 4 வருட கால அளவில் வழங்குகிறார்கள். அதாவது 1 வருடம், 2 வருடம், 3 வருடம், 5 வருடம் போன்ற கால அளவுகளில் வழங்குகிறார்கள். தற்போது ஒரு வருடத்தில் td கணக்கிற்கு 6.8% வட்டியும், இரண்டு வருட td கணக்கிற்கு 6.0% வட்டியும், 3 வருட td கணக்கிற்கு 7% வட்டியும், 5 வருட td கணக்கிற்கு 7.5% வட்டியும் வழங்குகிறாரார்கள்.
இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு வருடம் கழித்து தான் கணக்கை முடித்து கொள்ள முடியும். அப்படி நீங்கள் Premature ஆக Close செய்தால் 4% வட்டியை வழங்குகிறது.
Senior Citizen Saving Scheme:
Senior Citizen சேமிப்பு திட்டத்திற்கான வட்டி தற்போது 8.2% வழங்குகிறார்கள். நீங்கள் ஓபன் செய்த கணக்கை ஒரு வருடம் கழித்து முடித்தால் உங்களுடைய டெபாசிட் தொகையிலுருந்து 1.5% சார்ஜ் ஆக கட் செய்து மீதி உள்ள தொகையை கொடுப்பார்கள்.
அதுவே 2 வருடம் கழித்து கணக்கை முடித்து கொண்டால் 1% சார்ஜ் ஆக கட் செய்து மீதி உள்ள தொகையை கொடுப்பார்கள்.
Monthly Income Scheme:
இந்த திட்டத்தில் தற்போது 7.4% வட்டி கொடுக்கப்படுகிறது. 1 வருடத்திற்கு பிறகு Premature ஆக Close செய்து கொள்ளலாம். அப்படி 1 வருடத்தில் இருந்து 3 வருடத்திற்குள் Close செய்யும் போது 2% சார்ஜ் ஆக கட் செய்து மீதி உள்ள தொகையை கொடுப்பார்கள்.
அதுவே 3 வருடத்திற்கு பிறகு Close செய்யும் போது 1% சார்ஜ் ஆக கட் செய்து மீதி உள்ள தொகையை கொடுப்பார்கள்.
National Certificate:
இந்த திட்டத்தில் தற்போது 7.7% வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை இரண்டு காரணத்திற்காக மட்டும் தான் Close செய்ய முடியும். ஒன்று அக்கோன்ட ஹோல்டர் இறந்திட்டால் Close செய்து கொள்ளலாம். மற்றொன்று கணவன் மனைவி இருவரும் ஜாயிண்ட் கணக்காக தொடங்கியிருந்து இருவருக்கும் விவாகரத்து ஆனால் Premature ஆகClose செய்து கொள்ளலாம்.
Kisan Vikas Patra:
இந்த திட்டத்தில் தற்போது 7.5% வட்டி கொடுக்கப்படுகிறது. இதனுடைய கால அளவு 115 மாதம். இந்த திட்டத்தை Premature ஆக Close செய்வதற்கு 2.5 வருடம் கழித்து தான் CLOSE செய்ய முடியும்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |