போஸ்ட் ஆபிஸில் தினமும் Rs.100 சேமித்தால் Rs.15,00,000/- பெறலாம்

Public Provident Fund Scheme Tamil

போஸ்ட் ஆபிஸில் தினமும் Rs.100 சேமித்தால் Rs.15,00,000/- பெறலாம் | Post Office PPF Scheme Full Details in Tamil 2023

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் அஞ்சலகத்தில் உள்ள சேமிப்பு திட்டமான Public Provident Fund Scheme பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இந்த திட்டத்தில் நாம் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும். யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு தொகை எவ்வளவும்? மற்றும் அதிகபட்ச முதலீட்டு தொகை எவ்வளவு? போன்ற தகவல்களை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

பொது நீண்ட கால முதலீட்டு திட்டம் – Public Provident Fund Scheme Tamil:-Public Provident Fund Scheme

இந்திய அரசாங்கத்தின் அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படும் திட்டம் தான் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தில் நீங்க ஜாயின் செய்தபிறகு இந்த திட்டத்தின் கால அளவு முடிந்த பிறகு நீங்கள் எவ்வளவு தொகை டெபாசிட் செய்திர்களோ அந்த அமௌன்ட் மற்றும் அதற்கான வட்டியை 100% கேரண்டியாக நீங்கள் திரும்ப பெறலாம்.

மேலும் நீங்கள் ஒவ்வொரு வருடமும் செலுத்தக்கூடிய டெபாசிட் தொகைக்கு Tax Benefits-ஐ பெறலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SBI பேங்கில் 2 வருடத்தில் 17,36,918 ரூபாய் பெறக்கூடிய இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம் தெரியுமா..?

யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணைய தகுதியிடையவர்கள்:

  1. 18 வயது பூர்த்தியான இந்தியர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள்.
  2. ஒரு நபர் தன்னுடைய பெயரில் மட்டும் கணக்கை ஓபன் செய்யலாம், தங்களது குழந்தையின் பெயரிலும் பெற்றோர் அல்லது லீகல் காடியனாக இந்த கணக்கை ஓபன் செய்யலாம்.
  3. ஒரு நபர் தங்களது வாழ்நாளில் ஒரேயொரு PPF Account-ஐ மட்டும் தான் ஓபன் செய்ய முடியும்.
  4. அதேபோல் ஒரு நபர் ஏற்கனவே GPF அல்லது EPF திட்டத்தில் இருந்தாலும் இந்த PPF Account-ஐ ஓபன் செய்யலாம்.
  5. Joint Account-ஐ இந்த திட்டத்தில் நீங்கள் ஓபன் செய்ய முடியாது.
  6. Non-Resident Indian இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க முடியாது.

PPF Account-ஐ எங்கெல்லாம் ஓபன் செய்யலாம்?

பயனர்கள் இந்த PPF Account-ஐ நீங்கள் அஞ்சல் அலுவலகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வாக்குகளில் இந்த PPF Account-ஐ ஓபன் செய்யலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

Address Proof, Identity Proof போன்றவைக்கு உங்களது ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

குழந்தையின் பெயரில் இந்த கணக்கை ஓபன் செய்ய வேண்டும் என்றால் அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அல்லது ஆதார் கார்டை பயன்படுத்தலாம்.

டெபாசிட் அமௌன்ட்:

இந்த திட்டத்தின் குறைந்தபட்ச டெபாசிட் அமௌன்ட் ரூ.500/-
அதிகபட்ச டெபாசிட் அமௌன்ட் ரூ.1,50,000/- ஆகும்.

வட்டி எவ்வளவு வழங்கபடுகிறது:

இந்த ஸ்கீமின் தற்போதைய வட்டி விகிதம் 7.10% ஆகும்.

முதிர்வு காலம்:

இந்த ஸ்கீமின் மெச்சூரிட்டி பீரியட் 15 வருடங்கள் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதந்தோறும் 2,000 ரூபாய் செலுத்தினால் 3 லட்சம் பெறக்கூடிய அருமையான திட்டம்..!

தினமும் Rs.100 சேமித்தால் Rs.15,00,000/- பெறலாம் – Public Provident Fund Scheme Tamil:

இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் 100 ரூபாய் விகிதம் என்று மாதம் 3000 ரூபாய் டெபாசிட் செய்தால். இந்த ஸ்கீமினுடைய கால அளவான 15 வருடத்திற்கு மொத்தம் 5,40,000/- ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். அதற்கான வட்டி 4,06,704/- ரூபாய் வழங்கப்படும். மொத்தமாக அவர்களுடைய மெச்சூரிட்டி அமௌன்ட் 9,46,704/- ரூபாய் பெறலாம்.

இந்த ஸ்கீமின் கால அளவான 15 வருடத்தில் இந்த திட்டத்தை க்ளோஸ் செய்யாமல் மேலும் 5 வருடத்திற்கு With Deposit என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஸ்கீமை நீடித்தால் 20 வருடத்தில் மொத்த டெபாசிட் தொகையாக 11,26,704/- ரூபாய் டெபாசிட் செய்திருப்பார்கள். அதற்கான வட்டி 4,22,731/- ரூபாய் வழங்கப்படும். மொத்தமாக அவர்களுடைய மெச்சூரிட்டி அமௌன்ட்  15,49,435/- ரூபாய் பெறலாம்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil