RBI Bond Scheme in Tamil
நண்பர்களே நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை உள்ளது. அதில் ஒவ்வொருவருக்கும் முக்கிய பிரச்சனையாக இருப்பது என்றால் அது தான் பணம். இந்த பணத்தை நாம் தேவை இருக்கும் போது பயன்படுத்தாமல் தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத செலவு செய்வதை குறைத்துக்கொண்டு சேமித்தால் நல்ல வட்டி விகிதம் கிடைக்கும். அந்த வகையில் Pothunalam.com பதிவின் ஒவ்வொரு நாளும் ஓவ்வொரு விதமான திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்..!
RBI Bond Scheme in Tamil:
உங்களிடம் மொத்தமாக ஒரு தொகை உள்ளது என்றால் அதனை வைத்து எப்படி வட்டி பெறுவது என்று பார்க்கலாம் வாங்க..!
இதன் திட்டத்தில் சேர்வதற்கு முக்கியமாக 18 வயது பூர்த்தியானவர்கள் சேரலாம்.
எவ்வளவு தொகை டெபாசிட் செய்யலாம்:
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 தொகை முதல் முதலீடு செய்யலாம். அதேபோல் இந்த திட்டத்தில் எவ்வளவு வேண்டுமானால் முதலீடு செய்யலாம்.
400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம் மார்ச் 31 கடைசி தேதி
வட்டி விகிதம்:
இந்த திட்டத்தில் 7.35 சதவீதம் அதேபோல் இந்த திட்டத்தின் காலஅளவு 7 வருடம் ஆகும். ஒவ்வொரு மாதத்திற்கான வட்டி தொகையை உங்களுடைய சேமிப்பு கணக்கில் வரவு வைப்பார்கள். இதில் ஒவ்வொரு 6 மாதமும் ஒவ்வொரு வட்டி விதத்தை கணக்கிட்டு அதற்கு ஏற்ற தொகையை வழங்குவார்கள்.
அதேபோல் வருடத்திற்கு பிறகு உங்களுடைய மொத்த தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டம் அனைத்தும் தேசிய வங்கியிலும் சேர முடியும்.
இந்த திட்டத்தில் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி பெறலாம் என்று பார்க்கலாம் வாங்க..!
டெபாசிட் தொகை | வட்டி 6 மாதம் | மொத்த வட்டி | மொத்த தொகை |
1,00,000 | 3,675 | 51,450 | 1,51,450 |
2,00,000 | 7,350 | 1.02,900 | 3,02,900 |
3,00,000 | 11,025 | 1,54,350 | 4,54,350 |
5,00,000 | 18,375 | 2,57,250 | 7,57,250 |
10,00,000 | 36,750 | 5,14,500 | 15,14,500 |
400 நாட்களில் 45,000 ரூபாய் வட்டி தரும் இந்தியன் வங்கியின் திட்டம் ஏப்ரல் 30 கடைசி தேதி
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |