RBI Floating Rate Savings Bonds in Tamil
இன்றைய கால கட்டத்தில் சேமிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் எதில் சேமிப்பது, எதில் சேமித்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற குழப்பம் தான் இருக்கிறது. அதனால் தான் உங்களுக்கும் உதவும் வகையில் தினந்தோறும் நிறைய வகையான திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ரிசர்வ் வங்கி வழங்கும் Floating Rate Saving Bond திட்டத்தில் எவ்வளவு வட்டி வழங்குகிறார்கள், எவ்வளவு முதலீடு செய்தால் அதற்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் போன்ற தகவலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
RBI Floating Rate Savings Bonds in Tamil:
ஒரு முறை இந்த திட்டத்தில் முதலீடு செய்து ரிசர்வ் வங்கியின் சேமிப்பு திட்டம் பாத்திரத்தை வாங்கி விட்டால் ஒவ்வொரு 6 மாதத்திற்கும், இந்த திட்டத்திற்கான வட்டியை பெற முடியும்.
இவற்றில் குறிப்பாக ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை Government of India இந்த திட்டத்திற்க்கான வட்டி விகிதத்தை மாற்றுவார்கள். இதனால் இந்த பாண்டை Floating Rate Saving Bond என்று அழைக்கின்றன.
Government of India இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டம். ஆக இந்த திட்டத்தின் கால அளவு முடிந்த பிறகு நீங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்து இந்த பாண்டை வாங்குனீர்களோ, அந்த தொகையையும் நீங்கள் கேரண்டியுடன் திரும்ப பெறலாம்.
ஏப்ரல் 30 தான் கடைசி தேதி..! 400 நாட்களில் Rs.5,45,000/- தரும் சேமிப்பு திட்டம்..!
தகுதி:
இந்த திட்டத்தில் இந்திய குடிமகன் அனைவரும் பயன் பெறலாம். இதை நீங்கள் தனி நபர்கவோ அல்லது ஜாயிண்ட் கணக்காகவோ தொடங்கலாம்.
எங்கெல்லாம் இந்த பாண்டை வாங்கலாம்:
SBI பேங்க், AXIS பேங்க், ICICI பேங்க், HDFC பேங்க் போன்ற தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கலாம்.
முதலீடு எவ்வளவு:
இந்த திட்டத்தில் குறைந்த பட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்ச தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
முதிர்வு காலம்:
இந்தத்திட்டத்தில் கால அளவு 7 வருடம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 7 ஆண்டுகள் ஆகும். ஒருமுறை இந்த பாண்டை வாங்கிய பிறகு ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் அதற்க்கான வட்டியை பெறலாம். இந்த திட்டத்துக்கான கால அவகாசம் 7 ஆண்டுகள் முடிந்த பிறகு. இந்த பாண்டை எவ்வளவு தொகை கொடுத்து வாங்குனீர்களோ அந்த தொகையையும் கேரண்டியுடன் திரும்ப பெறலாம்.
வட்டி:
இந்த சேமிப்பு பத்திரத்தின் தற்போதைய வட்டி எவ்வளவு என்றால் ஜனவரி 1, 2023 முதல் 30 ஜூன், 2023 வரைக்கும் 7.15% வட்டி வழங்கபடுகிறது. இந்த வட்டி விகிதத்தை ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைப்பதினால் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படலாம். தற்போது 7.35% வட்டி வழங்கப்படுகிறது.
எவ்வளவு லாபம் கிடைக்கும்:
டெபாசிட் செய்த தொகை | வட்டி | 7 வருடத்துக்கான மொத்த வட்டி | மொத்த லாபம் |
1,00,000/- | 3,675/- | 51,450/- | 1,51,450/- |
2,00,000/- | 7,350/- | 1,02,900/- | 3,02,900/- |
3,00,000/- | 11,025/- | 1,54,350/- | 4,54,350/- |
5,00,000/- | 18,375/- | 2,57,250/- | 7,57,250/- |
10,00,000/- | 36,750/- | 5,14,500/- | 15,14,500/- |
5 வருடத்தில் Rs.14,50,000/- தரும் தபால் நிலைய அசத்தலான திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |