RD Interest Rates 2023
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நமது பொதுநலம்.காம் வலைத்தளத்தில் பலவகையான சேமிப்பு திட்டங்களை பற்றி பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால், அஞ்சல் துறை சேமிப்பு திட்டத்தில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் ஸ்கீமிற்கு தற்பொழுது வழங்கப்பட்டு வட்டி எவ்வளவு, எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவின் மூலம் படித்தறியலாம் வாங்க.
ரெக்கரிங் டெபாசிட்:
இந்த ரெக்கரிங் டெபாசிட் ஸ்கீம் பொறுத்தவரை மாதம் மாதம் சிறிய அளவில் சேமிக்கக்கூடிய ஒரு வகையான சேமிப்பு திட்டம் ஆகும்.
ஆக மாதம் மாதம் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.
இவற்றை நீங்கள் சிங்கிள் அக்கௌன்ட் ஆகவும் ஓபன் செய்யலாம், ஜாயின் ட்அக்கௌன்ட் ஆகவும் ஓபன் செய்யலாம், மைனர் அக்கௌன்ட் ஆகவும் ஓபன் செய்யலாம்.
மேலும் ஒருவர் அக்கௌன்ட் வேண்டுமானாலும் ஓபன் செய்யலாம். இதனுடைய முதலீட்டு காலம் ஐந்து வருடங்கள் ஆகும்.
தபால் துறையில் 3,000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 8.2% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு
அஞ்சல் அலுவலகத்தில் ரெக்கரிங் டெபாசிட்டிற்கு தற்பொழுது அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்றால் 6.7 சதவீதம் வட்டி வழங்கபடுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் மாதம் 2000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 7.1% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும்..?
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
ஐந்து வருடத்திற்கு மாதம் மாதம் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை | ஐந்து வருடத்திற்கான மொத்த டெபாசிட் | ஐந்து வருடத்துக்கான வட்டி | மெச்சுரிட்டி அமௌன்ட் |
100 | 6,000 | 1,136 | 7,136 |
500 | 30,000 | 5,681 | 35,681 |
1,000 | 60,000 | 11,369 | 71,369 |
2,000 | 1,20,000 | 22,732 | 1,42,732 |
5,000 | 3,00,000 | 56,830 | 3,56,830 |
10,000 | 6,00,000 | 1,13,650 | 7,13,650 |
சாமானிய மக்கள், முதலீடு செய்வதற்கான வழிமுறைகளில் தொடர் வைப்பு நிதி திட்டம் என்று அழைக்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் முக்கிய பங்கு விகிக்கிறது. ஆக
இந்த ரெக்கரிங் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இப்போ உங்கள் ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று உங்களுக்கென்று ஒரு கணக்கை திறக்கலாம். மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, ஐந்து வருடத்திற்கு பிறகு வட்டியுடன் உங்களுடைய முதலீடு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |