மாதந்தோறும் 2,000 ரூபாய் செலுத்தினால் 3 லட்சம் பெறக்கூடிய அருமையான திட்டம்..!

recurring deposit scheme post office 2023 in tamil

Post Office Recurring Deposit Scheme 2023

சேமிப்பு என்பது அனைவர்க்கும் மிகவும் முக்கியமான ஒன்று. இத்தகைய சேமிப்பை சிறு சேமிப்பு முறையில் சேமித்து வருவார்கள். ஆனால் நாம் இப்படி சேமித்து வைக்கும் தொகையானது கடைசி வரை அப்படியே இருக்காது. ஏனென்றால் நமக்கு தேவைப்பட்டால் அதனை உடனே எடுத்து செலவு செய்து விடுவோம். இப்படி செய்யாமல் நீங்கள் போஸ்ட் ஆபீஸில் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் சேமிக்க தொடங்கினால் உங்களுக்கு சேமித்த தொகை + வட்டி தொகை இரண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கிடைக்கும். அதுபோல போஸ்ட் ஆபீசில் மற்ற நிதி நிருவனங்களை விட அதிகமான வட்டி விகிதம் உள்ளது. ஆகையால் நீங்கள் மாதந்தோறும் 2000 ரூபாய் செலுத்தி 3 லட்சம் ரூபாய் பெறக்கூடிய ஒரு அருமையான போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ மாதம் 5,325 ரூபாய் வருமானம் தரும் அருமையான போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்..!

போஸ்ட் ஆபீஸ் திட்டம்:

இந்த திட்டத்தில் 18 வயதிற்கு மேல் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் போஸ்ட் ஆபீஸில் சேமித்து இந்த திட்டத்தின் கீழ் பயன் அடையலாம்.

போஸ்ட் ஆபீஸில் முதலில் நீங்கள் மாதம் சேமிக்கும் தொகை எவ்வளவு என்று தேர்வு செய்து அதன் படியே  கடைசி வரை சேமிக்க வேண்டும். மேலும் 100 ரூபாய் முதல் நீங்கள் இத்தகைய சேமிப்பு திட்டத்தில் சேமிக்க தொடங்கலாம்.

மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் வேண்டும் என்றால் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் சேர்ந்து சேமிக்க தொடங்கலாம்.

அபராதம் தொகை:

நீங்கள் போஸ்ட் ஆபீஸில் Post Office Recurring Deposit திட்டத்தில் சேர்ந்து சேமிக்க தொடங்கிய பிறகு இடையில் ஏதாவது ஒரு மாதம் சேமிப்பு தொகையினை செலுத்த தவறினாலும் கூட அதற்கான அபராத தொகையாக 100 ரூபாய்க்கு 1 ரூபாய் என்று கணக்கிடப்பட்டு அபராத தொகை பெறப்படும்.

மேலும் தொடர்ச்சியாக 4 மாதங்கள் சேமிப்பு தொகை செலுத்தவில்லை என்றால் உங்களுடைய கணக்கு பாதியிலேயே முடிக்கப்படும். இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் 2 மாதத்திற்குள் மீண்டும் கணக்கை தொடங்கும் வசதியும் உள்ளது.

வட்டி விகிதம்%:

போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் என்பது 5.8% ஆகும். இந்த வட்டி தொகை 5 வருடம் முழுவதும் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும்.

முதிர்வு காலம்:

இத்தகைய திட்டத்திற்கான முதிர்வு காலம் என்பது 5 வருடம் ஆகும். ஒருவேளை 5 வருடம் முடிந்த பிறகு நீங்கள் மீண்டும் இந்த கணக்கை தொடங்க விருப்பப்பட்டால் மீண்டும் 5 வருடம் ஆகமொத்தம் 10 வருடம் சேமிக்கும் வாய்ப்பும் இதில் உள்ளது. 

நீங்கள் இந்த கணக்கை  2 வருடம் கழித்த பாதியில் முடித்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் கணக்கை முடித்து கொள்ளலாம் மற்றும் அப்போது உள்ள வட்டி விகிதத்தின் படி மட்டுமே உங்களுடைய சேமிப்பு தொகை கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

Post Office Recurring Deposit Scheme:

5 வருட திட்டத்திற்கான மொத்த தொகை:

சேமிப்பு தொகை  5 வருடம் முதிர்வு காலம்  வட்டி தொகை%  மொத்த தொகை 
2,000 ரூபாய் 1,20,000 ரூபாய் 19,393 ரூபாய் 1,39,393 ரூபாய்

 

10 வருட திட்டத்திற்கான மொத்த தொகை:

சேமிப்பு தொகை  10 வருடம் முதிர்வு காலம்  வட்டி தொகை%  மொத்த தொகை 
2,000 ரூபாய் 2,40,000 ரூபாய் 85,295 ரூபாய் 3,25,295 ரூபாய்

 

இதையும் படியுங்கள்⇒ மாதந்தோறும் 10,000 ரூபாய் வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil