தபால் துறையின் சிறப்பான சேமிப்பு திட்டம்..! Post Office Recurring Deposit Scheme..!
Recurring Deposit Scheme In Post Office: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அஞ்சலக துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தொடர் வைப்பு நிதி திட்டத்தின் சிறப்புகளை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். அஞ்சலக துறைகளில் தொடர்ந்து சேமித்து வைப்பதில் இந்த திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 5 வருட காலங்களுக்கு எதிர்கால பயன்பாட்டிற்கு பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டது தான் இந்த தபால் துறை தொடர் வைப்பு நிதி சேமிப்பு திட்டம். சரி வாங்க நண்பர்களே இந்த திட்டத்தை பற்றிய முழு விவரங்களையும் இங்கே படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
5 வருட சேமிப்பு திட்டம்:
இந்த திட்டமானது 5 வருட கால சேமிப்பு திட்டம் ஆகும். இந்த தொடர் வைப்பு நிதி சேமிப்பு திட்டத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் குறிப்பிட்ட தொகையினை 5 வருடத்திற்கு நாம் சேமித்து வர வேண்டும். 5 வருடத்திட்ற்கு பின் நாம் சேமித்த தொகையினை வட்டியுடன் சேர்த்து பெற்றுக்கொள்ளலாம்.
திட்டத்தின் சிறப்பம்சம்:
இந்த திட்டம் நமக்கு மிகவும் பாதுகாப்பானது.
திட்டத்தில் சேமித்து வைத்து வந்த தொகை எந்த வித பாதிப்பும் இல்லாமல் நமக்கு கிடைக்கும் சிறப்பான திட்டம்.
இந்த சேமிப்பு திட்டத்தில் சேமிப்பதற்கு ரூ.100/- இருந்தால் போதும்.
தொடர் வைப்பு நிதி(RD) சேமிப்பு திட்டத்தை யாரெல்லாம் தொடங்கலாம்:
இந்த Recurring Deposit(RD) சேமிப்பு திட்டத்தை அனைத்து இந்தியர்களும் தொடங்கலாம்.
சேமிப்பு திட்டத்தில் சேருவதற்கு எந்த வித வயது வரம்பும் இல்லை. 10 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர் சான்றுடன் சேமிப்பு கணக்கினை தொடங்கலாம்.
10 வயதிற்கு மேல் உள்ள சேமிப்பாளர்கள் அவர்களின் சேமிப்பு கணக்கினை அவர்களே பின்பற்றி வரலாம்.
சேமிப்பு கணக்கை எப்படி தொடங்கலாம்:
இந்த தொடர் வைப்பு நிதி கணக்கை பணம் அல்லது செக்காகவும் கொடுத்து ஓபன் செய்து கொள்ளலாம்.
ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை கூட அஞ்சல் துறையில் தொடங்கலாம்.
சேமிப்பு கணக்கு மாற்றம்:
இந்த தொடர் வைப்பு நிதி சேமிப்பு திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட்டை தனி அக்கவுண்டாகவும் மாற்றும் வசதி உள்ளது.
தனி நபர் கணக்கினை ஜாயிண்ட் அக்கவுண்ட்டாகவும் மாற்றி கொள்ளலாம்.
பரிமாற்றம்:
இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் துறையிலும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது.
நியமனம்:
இந்த சேமிப்பு திட்டத்தை துவங்கும் முன்னே யாரை வேண்டுமானாலும் நியமனம் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் அதன் பிறகும் நியமனம் செய்து கொள்ளலாம்.
தேவையான ஆவணம்:
ஆதார் கார்டு, போட்டோ, பான் கார்டு, குழந்தைக்கு சேமிப்பு கணக்கை தொடங்குகிறீர்கள் என்றால் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் இருக்க வேண்டும்.
வைப்பு தொகையின் வரம்பு:
இந்த திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் ரூ. 100/- முதல் சேமிக்கலாம். அதிகபட்ச தொகை எதுவும் இல்லை.
குறிப்பாக மாதம் டெபாசிட் செய்த தொகையினை இடையில் மாற்ற முடியாது. உதாரணத்திற்கு முதல் மாதம் 100 செலுத்தினால் தொடர்ந்து அந்த தொகையினை தான் செலுத்த வேண்டும். இரண்டு மாதம் கழித்து ரூ.200/- என்ற மாற்று தொகையினை செலுத்த முடியாது.
டெபாசிட் தேதி:
RD சேமிப்பு திட்டத்தில் கணக்கினை துவங்கிய தேதியில் இருந்து அடுத்த மாத கணக்கின் முந்தய நாளே சேமிப்பு கணக்கை செலுத்திவிட வேண்டும். 1 நாள் தவறினால் கூட அதற்கான அபராத தொகையினை கட்ட வேண்டும்.
அபராத தொகை:
நீங்கள் செலுத்தும் ரூ.100/- கான அபராத தொகை ரூ. 1/- மட்டும்தான் அபராதமாக செலுத்த வேண்டும்.
தொடர்ந்து 4 மாதம் சேமிப்பில் பணம் போடாமல் விட்டால் சேமிப்பு கணக்கானது நிறுத்தப்பட்டு விடும்.
வட்டி:
இந்த சேமிப்பு திட்டத்தில் சேமிப்பாளர்களுக்கு 5.8% வட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. கணக்கை தொடங்கிய போது இருந்த வட்டி தான் 5 வருடம் வரை மாற்றம் அடையாமல் இருக்கும்.
அரசாங்கம் 3 மாதத்திற்கு ஒருமுறை வட்டியினை மாற்றம் செய்தாலும் இந்த சேமிப்பு திட்டத்தில் 5 வருடத்திற்கும் வட்டி மாறாமல் அதே வட்டி தொகைதான் நமக்கு கிடைக்கும்.
சேமித்த பணத்தினை முன்கூட்டியே பெறலாமா:
5 வருடம் முடியும் முன்னரே சேமித்த பணத்தினை 1 வருடம் முழுமையாக முடிந்ததும் நம் அக்கவுண்டில் இருக்கும் தொகைக்கு 50% எடுக்க முடியும்.
நமது சேமிப்பு கணக்கை தொடர முடியாமல் முடித்து கொள்ள நினைப்பவர்கள் 3 வருடம் முடிந்ததும் சேமிப்பு கணக்கினை நிறுத்திக்கொள்ளலாம்.
வருமான வரி(Income Tax):
இந்த தொடர் வைப்பு நிதி சேமிப்பு திட்டத்தில் வருமான வரி சலுகை என்பது எதுவும் கிடையாது.
கணக்கீடு:
ஒரு நபர் மாதம் ரூ.100/- டெபாசிட் செய்து வந்தால் வருடத்திற்கு ரூ.1,200 கட்டவேண்டும். 5 வருடத்தில் ரூ.6,000/- தொகையினை செலுத்தி முடித்திருப்பார். 5 வருடத்திற்கு கிடைக்கும் வட்டியானது 969. 5 வருடம் கழித்த பின்னர் அந்த நபருக்கு வட்டியுடன் கிடைக்கும் தொகை ரூ. 6,969/- கிடைக்கும். இது போன்று ஒவ்வொரு தொகைக்கும் வட்டி, கிடைக்கும் தொகை விவரத்தினை மேல் படித்து தெரிந்துகொள்ளவும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |