ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி..! விண்ணப்பிப்பது எப்படி..?

Advertisement

தனியார் பள்ளியில் LKG to 8th வரை இலவச கல்விக்கு விண்ணப்பிப்பது எப்படி.?

RTE Scholarship Details in Tamil:- பொதுவாக பெற்றோர்கள் அனைவருக்குமே தன் குழந்தைகள் நல்ல கல்வி அறிவை பெற வேண்டும், சிறந்த கல்வி நிறுவனத்தில் தன் குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசைகள் அதிகம் இருக்கும். இருப்பினும் பொருளாதாரம் மற்றும் வசதி குறைபாடு உள்ள ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகளினால் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத சூழல் இருக்கிறது.

அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி உரிமை சட்டம் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கலாம். சரி இந்த பதிவில் RTE என்றால் என்ன..? யாரெல்லாம் இதற்கு தகுதியுடையவர்கள்..? RTE சேர்க்கை 2024-25 ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..? போன்ற விவரங்களை படித்தறியலாம் வாங்க.

RTE என்றால் என்ன | RTE in Tamil:

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. சேர்க்கையில் 25% இட ஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே RTE சட்டம் ஆகும்.

இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு இந்த சட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைத்துள்ளது.

2024 – 2025 – RTE Admission Apply Online Tamil

RTE மூலம் மாணவர்களைச் சேர்க்க என்னென்ன தகுதிகள் தேவை என்பதை கீழ் படித்தறியலாம்..

RTE சேர்க்கை வயது வரம்பு 2024-25:

  • LKG வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01-08-2020 to 31-07-2021 ஆண்டிற்குள் பிறந்தவர்களாக இருக்க  வேண்டும்.
  • ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01-08-2018 to 31-07-2019 ஆண்டிற்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம்:

  • மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டு வருமான 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் போது உங்களுடைய வருமான சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் தேதி:

‘தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி, இலவசமாக படிப்பதற்கான, எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு வரும், ஏப்ரல் 22 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்’ என, பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், அரசு ஒதுக்கீடாக 25 சதவீத இடங்களில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப் பட வேண்டும். இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணம் செலுத்தாமல், இலவசமாகவே தனியார் பள்ளிகளில் படிக்கலாம். கட்டணத்தை அரசு வழங்கும்.

ஆகவே இந்த RTE தமிழ்நாடு இலவச கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2024 ஆகும். 

தேவைப்படும் ஆவணங்கள்:

  1. மாணவர் புகைப்படம் (150pc X175 px)
  2. பிறப்புச் சான்றிதழ்
  3. முகவரி சான்று (ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, வங்கி பாஸ்புக் மற்றும் பல)
  4. ஜாதி சான்றிதழ்
  5. வருமான சான்றிதழ்
  6. பிபிஎல் சான்றிதழ்
  7. குடியிருப்பு சான்றிதழ்
  8. எச்.ஐ.வி பாதித்த அறிக்கைகள்
  9. அனாதை சான்றிதழ்
  10. திருநங்கை சான்றிதழ்

RTE விண்ணப்பிப்பது எப்படி? | RTE சேர்க்கை 2024-25 தமிழ்நாடு

ஸ்டேப்: 1

http://tnschools.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.

அவற்றில் RTE என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது மற்றொரு PAGE திறக்கப்படும் அவற்றில் Start Application என்பதை கிளிக் செய்த உடன் விண்ணப்ப பக்கம் திறக்கப்படும்.

ஸ்டேப்: 2

அவற்றில் Personal Details என்பதில் குழந்தையின் பெயர், பாலினம், பிறந்த தேதி, மதம், சமூகம், அலைபேசி எண், பிறந்த தேதிப்படி விண்ணப்பிக்கக்கூடிய வகுப்பு, மின்னஞ்சல் ஐடி (ஏதேனும் இருந்தால்) ஆகிய விவரங்களை உள்ளிட்டு SAVE என்பதை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

நீங்கள் SAVE பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு Application number கொடுக்கப்படும் அதனை சரியாக குறித்து வைத்து கொள்ளுங்கள். பின்பு Click here to Login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை..!

ஸ்டேப்: 4

Click here to Login என்பதை கிளிக் செய்தவுடன் Application number, Password ஆகியவற்றில் Application number மற்றும் நீங்கள் கிரியேட் செய்த Password ஆகியவரை உள்ளிட்டு Login என்பதை கிளிக் செய்து லாகின் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

Login செய்த பின் Parent Details என்ற ஒரு PAGE திறக்கப்படும் அவற்றில் தந்தை, தாய் அல்லது பாதுகாவலர் இவர்களில் யார் குழந்தைக்கு அப்ளை செய்கின்றிர்களோ, அந்த உறவை தேர்வு செய்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு தந்தை அப்ளை செய்வதாக இருந்தால், தந்தை என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். பின் தந்தையின் விவரங்களை உள்ளிட்ட வேண்டும். அதாவது தந்தையின் பெயர், தந்தையின் தொழில், குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம், எந்த வகை கீழ் விண்ணப்பித்து இருக்கிறீர், அதன் வகை ஆகிய விவரங்களை உள்ளிட்ட வேண்டும். பின் SAVE என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 6

அதன் பிறகு Address Details என்ற பக்கம் திறக்கப்படும், அவற்றில் வீட்டு முகவரி, அஞ்சல் குறியீடு, மாவட்டம் மற்றும் தங்களது இல்லத்தை இயன்ற அளவு துல்லியமாக Landmark-ஐ குறிப்பிட வேண்டும். தங்களது முகவரிக்கும் தாங்கள் வரைபடத்தில் குறித்துள்ள இடத்திற்கும் இடைப்பட்ட தூரம் மிக அதிகமாக இருப்பின், தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். ஆகவே நீங்கள் சரியான முகவரியை உள்ளிட்ட பிறகு Save பட்டனை கிளிக் செய்தவுடன் Confirm Address என்று கேட்கும். தங்களுடைய முகவரி சரியானதாக இருந்தால் Confirm Address என்பதை கிளிக் செயுங்கள்.

ஸ்டேப்: 7

  • அடுத்ததாக Document என்ற பக்கம் திறக்கப்படும். அவற்றில் (Width-150px, Heigth-175px) அளவுள்ள மாணவர் புகைப்படம் ஒன்று. பிறப்பு சான்று, பெற்றோர் அடையாள அட்டை, முகவரி சான்று, சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகலினை JPG / JPEG files with maximum size 1MB-யில் பதிவேற்றவும் செய்ய வேண்டும். பிறகு Save என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • பின் குழந்தையை பள்ளியில் சேர்க்கும் நேரத்தில் நீங்கள் அச்சு நகல் (Hard copy) பள்ளிக்கு வழங்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> பொன் மகன் சேமிப்பு திட்டம்

ஸ்டேப்: 8

இறுதியாக Select Schools என்ற பக்கம் திறக்கப்படும், அவற்றில் நீங்கள் பள்ளியை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து எந்தெந்த பள்ளி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதோ அந்த பள்ளிகள் பட்டியலிடப்படும். ஆகவே அவற்றில் தங்களுக்கு பிடித்த பள்ளியை தேர்வு செய்து Save என்பதை கிளிக் செய்யுங்கள். (5 பள்ளிகள் வரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்)

ஸ்டேப்: 9

விண்ணப்பதாரர்கள் மேல் கூறப்பட்டுள்ளது போல் Step by Step-ஆக விவரங்களை சரியாக பூர்த்தி செய்திருந்தால் உங்களுக்கு மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு விண்ணப்ப படிவம் திறக்கப்படும். அவற்றில் கூறப்பட்டிருக்கும் Terms & Conditions-ஐ சரியாக பிடித்து Final Summit என்பதை கிளிக் செய்யுங்கள்.

நீங்கள் என்னென்ன பள்ளிகளை தேர்வு செய்திர்களோ, அந்தந்த பள்ளிகளுக்கு உங்களுடைய விண்ணப்பங்கள் Summit செய்யப்பட்டிருக்கும்.

ஆகவே உங்கள் விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் நீங்கள் அப்லோட் செய்திருந்த ஆவணங்களின் அசல் சான்றுதலுடன் இணைத்து, அப்ளை செய்த அந்தந்த பள்ளிகளுக்கு எடுத்து சென்று சமர்ப்பிக்கவும். அவ்வளவுதான் RTE ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement