Rural Postal Life Insurance Interest Rate 2023
பணம் என்பது இன்றிமையாத ஒன்றாக உள்ளது. இத்தகைய பணத்தை நாம் நம்முடைய தேவைக்காக பயன்படுத்திவிட்டு மீதம் இருக்கும் பணத்தினை போஸ்ட் ஆபீஸ் அல்லது நிதி நிறுவனம் மூலம் சேமிக்க தொடங்குவோம். இதுமாதிரி நாம் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் சேமிக்க தொடங்கும் போது அத்தகைய திட்டத்திற்கான குறிப்பிட்ட வட்டி விகிதம் வழங்கப்படும். அதுவே அத்தகைய வட்டி விகிதமானது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதிகரிக்க செய்யும். இப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது போஸ்ட் ஆபீஸில் உள்ள ஆயுள் காப்பீட்டு புதிய வட்டி விகிதம் அறிமுகம் ஆகியுள்ளது. ஆகையால் அத்தகைய வட்டி விகிதங்களை தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Whole Life Assurance (Gram Suraksha) Scheme in Tamil:
போஸ்ட் ஆபீசில் உள்ள இத்தகைய திட்டத்தில் நீங்கள் சேரும் போதே உங்களுக்கான பாலிசி தொகையினை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 60 ரூபாய் உங்களுக்கு போனஸ் தொகையாக வழங்கப்படும்.
உதாரணமாக நீங்கள் 1 லட்சம் ரூபாய் பாலிசியினை தேர்வு செய்தால் 6,000 ரூபாய் உங்களுக்கு போனஸ் தொகையாக அளிக்கப்படும்.
Gram Santosh Endowment Assurance Policy:
அதேபோல தபால் துறையில் உள்ள Gram Santosh Endowment Assurance திட்டத்தில் சேரும் போதே உங்களுக்கு பாலிசி தொகையினை நீங்கள் நிர்ணயித்து கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களுக்கு அதற்கான வட்டி தொகை அளிக்கப்படும்.
ஆனால் இனிமேல் நீங்கள் தேர்வு செய்த பாலிசி தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 48 ரூபாய் போனஸ் தொகையாக அளிக்கப்படும். அப்படி என்றால் நீங்கள் 1 லட்சம் ரூபாய் பாலிசி தொகையினை நீங்கள் வாங்கினால் 4,800 ரூபாய் போனஸ் தொகையாக வருடம் முழுவதும் அளிக்கப்படும்.
Convertible Whole Life Assurance (Gram Suvidha):
அஞ்சல் துறையில் உள்ள இந்த பாலிசிக்கான தொகையினை உங்களுடைய 80-வது வயதில் தான் பெற முடியும். அதனால் இந்த பாலிசிக்கான போனஸ் தொகையும் அதிகமாகவே வழங்கபடுகிறது. அப்படி என்றால் உங்களுடைய பாலிசி தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 60 ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்படுகிறது.
மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் 3,15,568 பெறும் அரசு திட்டம்.. |
Anticipated Endowment Assurance (Gram Sumangal) in tamil:
நான்காவதாக நாம் பார்க்கப்போகும் பாலிசிக்கான போனஸ் தொகை Anticipated Endowment Assurance (Gram Sumangal) ஆகும். இதிலும் உங்களுடைய பாலிசி தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 45 ரூபாய் என 1 லட்சம் ரூபாய்க்கு 4,500 ரூபாய் வருடந்தோறும் அளிக்கப்படுகிறது.
10 Years Rural Pli (Gram Priya):
போஸ்ட் ஆபீசில் உள்ள 10 Years Rural Pli (Gram Priya) பாலிசியில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 45 ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் நீங்கள் 1 லட்சம் ரூபாய் பாலிசி தொகையாக பெற்றால் உங்களுக்கு வருடந்தோறும் 4,500 ரூபாய் போனஸ் வழங்கப்படும்.
Bal Jeevan Bima Policy Post Office in Tamil:
குழந்தைகளுக்காக போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த Bal Jeevan Bima Policy-யில் நீங்கள் வாங்கிய பாலிசி தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய் 48 ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்படுகிறது.
எனவே நீங்கள் 1,00,000 ரூபாய் பாலிசி தொகையாக வாங்கினால் உங்களுக்கு வருடம் முழுவதும் 4,800 ரூபாய் போனஸ் தொகையாக அளிக்கப்படும்.
இதையும் படியுங்கள்👉👉👉
மாதந்தோறும் 5,025 ரூபாய் வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |