Saral Pension Plan in Lic
பொதுவாக அனைவருக்கும் வீட்டில் எவ்வளவு பணம் சம்பாதித்தலும் அதில் ஒரு பகுதியினை சேமிப்பிற்காக ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கான சரியான வாய்ப்புகள் தான் யாருக்கும் கிடைப்பது இல்லை. அதுவே ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் பணத்தினை சேமிக்க தொடங்கிவிட்டோம் என்றால் அதில் நமக்கு முதலீடு மற்றும் வட்டி தொகை என இரண்டுமே கிடைக்கும். இத்தகைய முறை ஆனது மூத்த குடிமக்களுக்கும் பொருந்தும் வகையில் இருக்கிறது. அதனால் இன்று Lic-யில் உள்ள ஒரு அருமையான பென்ஷன் திட்டத்தினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். மேலும் இதில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு ரூபாயினை பென்ஷன் தொகையாக பெறலாம் என்ற முழு விவரத்தினையும் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Saral Pension Scheme Lic:
Lic அறிமுகம் செய்து உள்ள இந்த சாரல் பென்ஷன் திட்டம் ஆனது ஓய்வு ஊதிய தொகையினை பெற வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தில் சேரும் நபர் உங்களுக்கான தொகையினை நீங்கள் ஒற்றை பிரிமீயமாக தான் செலுத்த வேண்டும்.
இத்தகைய சாரல் பென்ஷன் பாலிசியில் குறைந்தப்பட்சம் 40 வயது முதல் அதிகப்பட்சம் 80 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே சேர்ந்து பயன்பெற முடியும்.
பாலிசி தொகை:
இந்த பாலிசியில் நீங்கள் செலுத்தும் தொகையினை பொறுத்தே வருடாந்திர பென்ஷன் தொகை ஆனது அமையும். அதனால் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முதலீடு செய்து கொள்ளலாம்.
New Scheme👇👇 மத்திய அரசின் அசத்தலான திட்டம்..! 7 வருடத்தில் Rs.15,14,500/- பெறலாம்..
டெபாசிட் செய்யும் முறை:
- 3 மாதத்திற்கு ஒருமுறை
- 6 மாதத்திற்கு ஒருமுறை
- வருடத்திற்கு ஒருமுறை
உங்களுக்கான பென்ஷன் தொகையினை மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று முறைகளில் ஏதேனும் ஒன்றன் அடிப்படையில் ஒற்றை பிரிமீயமாக தொகையினை செலுத்த வேண்டும்.
கடன் வசதி:
ஒரு நபர் சாரல் பென்ஷன் திட்டத்தில் கீழ் சேர்ந்து 6 மாதத்திற்கு பிறகு கடனை பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை இந்த பாலிசியினை Premature ஆக முடித்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கான அம்சமும் இதில் உள்ளது.
ஆனால் உங்களுடைய பாலிசி தொகையில் இருந்து 5% தொகை பிடிக்கப்படும்.
சாரல் பென்ஷன் யோஜனா:
மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் 40 வயதிற்கு உட்பட்ட ஒரு நபர் 2,50,000 ரூபாயினை ஒற்றை பிரீமியமாக செலுத்தினால் 12,000 ரூபாய் வருடம் முழுவதும் உங்களுக்கு பென்ஷன் தொகையாக கிடைக்கும்.
New Scheme👇👇 தபால் துறையில் 90 நாட்களுக்கு ஒரு முறை 60,000 ரூபாய் வருமானம் தரும் அருமையான திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |