மாதம் 1500 ரூபாய் சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!

Advertisement

மாதம் 1500 ரூபாய் சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..! Savings Tips and Tricks in Tamil

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. ஏன் என்றால் அப்பொழுது தான் நமக்கு பணம் தேவை ஏற்படும் போது அதனை பூர்த்தி செய்ய நாம் சேமித்த பணம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் சேமிக்கும் பணத்திலும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் அதாவது உங்கள் பிள்ளைகளின் படிப்பிற்கு, திருமணத்திற்கு, வீடு கட்டுவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்குவதற்கு என்று நீங்கள் திட்டமிட்டு பணத்தை சேமித்தால் அது மிகவும் சிறந்த ஒரு சேமிப்பாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் மாதம் 1500 அல்லது 2000 ரூபாயை குறிப்பிட்ட காலம் சேமித்து வந்தோம் என்றால் 10 லட்சம் வரை நாம் சேமிக்க முடியும். அது எப்படி என்பது குறித்த தகவலை இப்பொழுது நாம் படித்திரியலாம் வாங்க.

குறிக்கோள்:

நீங்கள் சேமிக்க வேண்டும் என்று முடிவெடுத்தப்பிற்கு அந்த சேமிப்பானது குறிகிய கால சேமிப்பாக இருக்க வேண்டுமா அல்லது நீண்ட கால சேமிப்பாக இருக்க வேண்டும் என்று ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள்.

பின் உங்களுக்கு வருமானத்திற்கு தகுந்தது போல் குறைந்தபட்சம் 1500 ரூபாய் முதல் அதிகபட்சமாக உங்களால் எவ்வளவு சேமிக்க முடியுமோ அவ்வளவு ரூபாயை சேமிக்கலாம்.

Recurring deposits:

குறுகிய கால முதலீட்டு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள RD-யில் சேர்த்து முதலீடு செய்யலாம். இதனுடைய முடிவு காலம் 5 ஆண்டுகள் மட்டுமே, 5 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் முதலீடு செய்த தொகை மற்றும் அதற்ககான வட்டி ஆகியவற்றை சேர்த்து நீங்கள் மேற்றுக்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் Recurring deposit-யில் மாதம் மாதம் 1500 ரூபாயை 5 வருடத்திற்கு முதலீடு செய்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் மொத்தமாக 60 மாதங்களுக்கு 90000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள், இதற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 5.8% ஆகும். ஆக உங்களுக்கு வட்டியாக 14,542/- ரூபாய் வழங்கப்படும். மொத்தமாக 5 வருடம் கழித்து உங்களுக்கு 1,04,542/- ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Rs.79/- சேமித்தால் 10 லட்சம் தரும் திட்டம்..!

Post Office PPF Scheme:

நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் அஞ்சல் அலுவலத்தில் உள்ள PPF ஸ்கீமில் இந்து முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இந்த ஸ்கீமிற்கு அஞ்சல் அலுவலகம் தற்பொழுது 7.1% வட்டி வழங்குகிறது.

மொத்தமாக நீங்கள் 180 மாதங்கள் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். மாதம் மாதம் 1500 ரூபாய் என்று 15 வருடத்திற்கு நீங்கள் முதலீடு செய்து வந்தீர்கள் என்றால் உங்களுடைய டெபாசிட் தொகையானது 2,70,000 ரூபாயாக இருக்கும் அதற்கு வழங்கப்படும் வட்டி 2,18,185. ஆக 15 வருடம் முடிவடைந்த பிறகு உங்களுக்கு வழங்கப்படும் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு என்றால் 4,88,185/- ரூபாயாக இருக்கும்.

அதுவே இன்னும் ஒரு 5 வருடத்தினை நீடித்துஅதாவது 22 வருடங்களுக்கு முதலீடு செய்திருந்தால் உங்களுடைய டெபாசிட் தொகை 3,96,000/- அதற்கு வழங்கப்படும் வட்டி 5,60,404/- ஆகிய இரண்டியும் செய்து சேர்த்து உங்களுக்கு 9,56,404/- ரூபாய் வழங்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
777 நாட்களில் 3,93,000 ரூபாய் கிடைக்கக்கூடிய இந்த அசத்தலான திட்டம் பற்றி தெரியுமா..?

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement