sbi Amrit Kalash FD Scheme in Tamil
அனைவருக்குமே சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இதில் சேமிப்பது, எதில் சேமித்தால் வட்டி அதிகமாக கிடைக்கும் என்ற புரிதல் இல்லை. அந்த வகையில் SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு அருமையான திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை பற்றிய தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க..
SBI Fixed Deposit Scheme in Tamil:
SBI அம்ரித் கலாஷ் ஜமா யோஜனா திட்டம் பிப்ரவரி 15, 2023 அன்று அறிமுகப்படுத்தியது. அம்ரித் கலாஷ் என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் 2023 பிப்ரவரி 15 முதல் தொடங்கப்பட்டு 2023 மார்ச் 31 வரை மட்டுமே பயன் அடையலாம்.
முதலீடு தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயாகவும், அதிகபட்சம் தொகையாக 2 கோடி வரை முதலீடு செய்யலாம்.
வட்டி:
இந்த திட்டத்திற்கு 60 வயதுக்கு குறைவான நபர்களுக்கு 7.10%, சீனியர் சிட்டிசனுக்கு 7.60% வட்டி கொடுக்கப்படுகிறது.ஒரு முறை நீங்கள் முதலீடு செய்தால் அதற்கான வட்டி தொகையை ஒவ்வொரு மாதம் அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை அல்லது நீங்கள் விருப்படுகின்ற கால அளவுகளில் பெற்று கொள்ளலாம். இல்லையென்றால் 400 நாட்கள் முடிந்த பிறகு நீங்கள் செலுத்திய முதலீடு மற்றும் வட்டியோடு சேர்த்து பெற்று கொள்ளலாம்.
மாதம் 9,250 ருபாய் வரை பென்ஷன் தரும் LIC -யின் அருமையான திட்டம்..
டெபாசிட் காலம்:
அமீர் கலாஷ் திட்டமானது 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டம் ஆகும்.
கடன் வசதி:
இந்த திட்டத்தில் கடன் எடுக்கும் வசதியும் உண்டு. நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளீர்களோ அதை பொறுத்து கடன் தொகை பெற்று கொள்ளலாம்.
நீங்கள் ஏதவாது ஒரு SBI வங்கியில் இந்த திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் இந்தியாவில் உள்ள எந்த வங்கிக்கும் வேண்டுமானாலும் TRANSACTION செய்து கொள்ளும் வசதி உண்டு.
எடுத்துக்காட்டாக இந்த திட்டத்தில் 5 லட்சம் முதலீடு செய்தீர்கள் என்றால் 40029 ரூபாய் வட்டி கொடுக்கப்படுகிறது. முதலீடு மற்றும் வட்டி என சேர்த்து 5,40,029 அதுவே நீங்கள் சீனியர் சிட்டிசன் ஆக இருந்தால் 42938 ரூபாய் வட்டியாக கொடுக்கப்படுகிறது. முதலீடு மற்றும் வட்டி என சேர்த்து 5,42,938 ரூபாய் கிடைக்கும்.
Lic-யில் 3 லட்சம் செலுத்தினால் 9 லட்சம் கிடைக்ககூடிடய அருமையான பாலிசி..! மிஸ் பண்ணிடாதீங்க..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |