SBI திட்டம்
நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதனை கொஞ்சம் கூட தாமதம் செய்ய கூடாது. ஏனென்றால் நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்கினால் தான் பிற்காலத்தில் அது உங்களுக்கு ஒரு நல்ல பலனை அளிக்கக்கூடிய தொகையாக கிடைக்கும். இதுபோல நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்காக நிறைய திட்டங்கள் உள்ளது. அதில் இன்றைய பதிவில் SBI வங்கியில் உள்ள அம்ரீட் கலாஷ் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI Fixed Deposit Scheme in Tamil:
SBI அம்ரித் கலாஷ் திட்டம் ஆகஸ்ட் 15, 2023 வரை மட்டுமே பயன் அடையலாம்.
முதலீடு தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயாகவும், அதிகபட்சம் தொகையாக 2 கோடி வரை முதலீடு செய்யலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா
வட்டி:
இந்த திட்டத்திற்கு 60 வயதுக்கு குறைவான நபர்களுக்கு 7.10%, சீனியர் சிட்டிசனுக்கு 7.60% வட்டி கொடுக்கப்படுகிறது. ஒரு முறை நீங்கள் முதலீடு செய்தால் அதற்கான வட்டி தொகையை ஒவ்வொரு மாதம் அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை அல்லது நீங்கள் விருப்படுகின்ற கால அளவுகளில் பெற்று கொள்ளலாம். இல்லையென்றால் 400 நாட்கள் முடிந்த பிறகு நீங்கள் செலுத்திய முதலீடு மற்றும் வட்டியோடு சேர்த்து பெற்று கொள்ளலாம்.
டெபாசிட் காலம்:
அமீர் கலாஷ் திட்டமானது 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டம் ஆகும்.
கடன் வசதி:
இந்த திட்டத்தில் கடன் எடுக்கும் வசதியும் உண்டு. நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளீர்களோ அதை பொறுத்து கடன் தொகை பெற்று கொள்ளலாம்.
நீங்கள் ஏதவாது ஒரு SBI வங்கியில் இந்த திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் இந்தியாவில் உள்ள எந்த வங்கிக்கும் வேண்டுமானாலும் TRANSACTION செய்து கொள்ளும் வசதி உண்டு.
மாதந்தோறும் 1242 ரூபாய் வருமானம் தரும் திட்டம்..]
எவ்வளவு வட்டி கிடைக்கும்:
இந்த திட்டத்தில் 3 லட்சம் முதலீடு செய்தீர்கள் என்றால் 23,767 ரூபாய் வட்டி கொடுக்கப்படுகிறது. முதலீடு மற்றும் வட்டி என சேர்த்து 3,23,767 ரூபாய் கிடைக்கும்.
அதுவே நீங்கள் சீனியர் சிட்டிசன் ஆக இருந்தால் 25,494 ரூபாய் வட்டியாக கொடுக்கப்படுகிறது. முதலீடு மற்றும் வட்டி என சேர்த்து 3,25,494 ரூபாய் கிடைக்கும்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |