SBI வங்கியில் Rs. 2,58,196/- வெறும் இரண்டே வருடத்தில் பெறக்கூடிய சேமிப்பு திட்டம்..!

Advertisement

SBI Bank RD Scheme 

நாம் அனைவரும் ஏதோ வங்கியில் கணக்கு திறந்து பண பரிவர்த்தனை செய்து வருகின்றோம். அத்தகைய வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கியும் ஒன்றாக உள்ளது. இந்த வங்கியினை நாம் சுருக்கமாக ஆங்கிலத்தில் SBI பேங்க் என்று அழைத்து வருகிறோம். இப்படிப்பட்ட வங்கியில் நமக்கு தெரிந்தவை என்றால் அது இவை மட்டும் தான். ஆனால் இதில் நமக்கு தெரியாத எண்ணற்ற பலன்களை பெறக்கூடிய சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதனால் இன்று SBI வங்கியில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தினை முழு விவரத்தையும் அதில் நாம் சேமித்தால் எவ்வளவு தொகையினை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெறலாம் என்றும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எஸ்பிஐ சேமிப்பு திட்டங்கள்:

ரெக்கரிங் டெபாசிட்

SBI பேங்கில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டம் ஆனது மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையினை செலுத்தி குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு நிலையான வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு திட்டம் ஆகும்.

இத்தகைய திட்டத்தில் 18-வயது பூர்த்தி அடைந்த மக்கள் அனைவரும் சேர்ந்து பயன் அடையலாம்.

சேமிப்பு தொகை:

இந்த திட்டத்திற்கான குறைந்தப்பட்ச சேமிப்பு தொகை 100 ரூபாயாகும். அதுவே அதிகப்பட்ச தொகை என்பது எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

டெபாசிட் காலம்  வட்டி விகிதம் 
1  வருடம் 6.80%
2  வருடம் 7.00%
3 வருடம் 6.50%
4 வருடம் 6.50%
5 முதல் 10 வருடம் 6.50%

 

டெபாசிட் காலம்:

SBI பேங்கில் உள்ள இந்த திட்டத்திற்கான டெபாசிட் காலம் 1 வருடம் முதல் 10 வருடம் வரை ஆகும்.

New Scheme👇👇 செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

2 வருடத்தில் கிடைக்கும் தொகை:

மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளின் படி ஒரு நபர் 2 வருட கால அளவில் குறிப்பிட்ட தொகையினை மாதந்தோறும் சேமித்து வந்தால் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர சேமிப்பு தொகை  மொத்த வட்டி தொகை  மொத்த சேமிப்பு தொகை  அசல் தொகை 
Rs. 1,000/- Rs. 1,820/- Rs. 24,000/- Rs. 25,820/-
Rs. 5,000/- Rs. 9,101/- Rs. 1,20,000/- Rs. 1,29,101/-
Rs. 10,000/- Rs. 18,196/- Rs. 2,40,000/- Rs. 2,58,196/-
Rs. 50,000/- Rs. 90,990/- Rs. 12,00,000/- Rs. 12,90,990/-

 

 குறிப்பு: வட்டி விகிதம் மற்றும் சேமிப்பு தொகையினை பொறுத்து அனைத்து தொகையும் மாறுபடும்.

New Scheme👇👇 மாதந்தோறும் 1242 ரூபாய் வருமானம் தரும் திட்டம்..

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement