உங்களது பணத்தை டபுள் ஆக்கும் SBI சேமிப்பு திட்டம்..

sbi ppf scheme details in tamil

SBI PPF  Scheme Details in Tamil

நம் முன்னோர்கள் காலத்தில் பணத்தை சம்பாதிப்பது பெரிய போராட்டமாக இருக்கும். அப்படியே சம்பாதித்தாலும் அன்றைய பொழுதுக்கு தான் சரியாய் இருக்கும். அதனை சேமிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பணத்தை சம்பாதிப்பதை விட எதிர்காலத்தை நினைத்து சேமிக்க  வேண்டும் என்ற பயம் அதிகமாக இருக்கிறது. எந்த திட்டம் நம்பிக்கையானது, எதில் ரிஸ்க் குறைவாக இருக்கும், எதில் லாபம் அதிகமாக கிடைக்கும் என்ற சந்தேகம் வருகிறது. உங்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் SBI வங்கியில் உள்ள PPF திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…

SBI PPF  Scheme Details:

sbi ppf scheme details in tamil

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

தகுதி:

SBI வங்கியில் உள்ள PPF திட்டத்தில் அனைவரும் சேரலாம். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தங்களது பெற்றோர்கள் பெயரில் கணக்கை தொடங்கலாம்.

முதலீடு:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாயும், அதிகபட்சம் வருடத்திற்கு  1,50,000 ரூபாய் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

வட்டி:

SBI PPF திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் கார்டு
  • பான் கார்டு
  • வீடு முகவரி சான்றிதழ்
  • போட்டோ

மேல் கூறப்பட்டுள்ள ஆவணங்களை SBI வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

5 வருடத்தில் 2,94,132 ரூபாய் பெறக்கூடிய அருமையான பிக்சட் டெபாசிட் திட்டம்..!

முதிர்வு காலம்:

இந்த திட்டத்திற்கான கால அளவு 15 வருடங்கள். ஆனால் 15 வருடங்களில் முடித்து கொள்ளலாம். இல்லையென்றால் 5 வருடங்களுக்கு நீட்டித்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

எவ்வளவு லாபம் கிடைக்கும்:

நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தி வந்தால் 15 வருட கால முடிவில் 1,80,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 1,45,457 ரூபாய் கிடைக்கும். முதலீடு மற்றும் வட்டி தொகை சேர்த்து 3,25,457 ரூபாய் கிடைக்கும்.

அதுவே நீங்கள் 5 வருடத்திற்கு கணக்கை நீட்டித்தால் 2,40,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 2,92,663 ரூபாய் கிடைக்கும். மொத்த தொகையாக 5,32,663 ரூபாய் கிடைக்கும்.

444 நாட்களில் Rs.5,51,110/- பெறலாம்..! இப்படி ஒரு திட்டமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking