SBI Sarvottam FD Scheme Details
SBI வங்கி நம்மில் பல பேருக்கு தெரிந்து இருந்தாலும் கூட அதில் நாம் பயன் அடையும் விதத்தில் நிறைய நன்மைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் Fixed Deposit திட்டத்தில் புதிய வட்டி விகிதம் மற்றும் Aamir Kissa திட்டம் என்று தொடர்ச்சியாக இரண்டு புதிய அம்சங்கள் வந்தது. இதனை தொடர்ந்து இப்போது அதே SBI வங்கியில் 2 வருடத்தில் 17,36,918 ரூபாய் வரை பெறக்கூடிய Sarvottam FD என்ற திட்டம் இப்போது வந்துள்ளது. ஆகாயல் அந்த திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன் அடையலாம் மற்றும் அதற்கான வட்டி விகிதம்% எவ்வளவு என்று இத்திட்டத்தை பற்றி முழுமையாக இன்றைய Scheme பதிவில் தெரிந்துக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் உடனே அந்த திட்டத்தில் சேரலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ மாதம் 5,325 ரூபாய் வருமானம் தரும் அருமையான போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்..!
SBI Sarvottam FD Scheme Details in Tamil:
புதிதாக அறிமுகம் ஆகியள்ள SBI Sarvottam FD திட்டத்தில் இந்த குடிமக்கள் அனைவரும் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் 18 வயதிற்குள் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் இந்திய குடியுரிமை பெறாத நபர்கள் இத்தகைய திட்டத்தில் சேர முடியாது.
இந்த திட்டத்தின் சேருவதற்கான குறைந்தபட்ச தொகை 15,00,000 ரூபாய் மற்றும் அதிகபட்ச தொகை 2 கோடி ரூபாய் ஆகும்.
மேலும் நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் லோன் பெறலாம் என்றால் அதற்கான வாய்ப்பும் உள்ளது. அதேபோல இத்திட்டத்தில் சேர்ந்து பிறகு இடையில் எந்த விதமான தொகையினையும் பெற முடியாது.
நீங்கள் தேர்வு செய்து முதிர்வு காலம் முடிந்த பிறகு வட்டி தொகை% + சேமிப்பு தொகை இரண்டினையும் சேர்த்து பெற்று கொள்ளலாம்.
Sarvottam FD வட்டி விகிதம்%:
Sarvottam FD Scheme Interest | ||
முதிர்வு காலம் | General Citizen | Senior Citizen |
1 வருடம் | 7.10% | 7.60% |
2 வருடம் | 7.40% | 7.90% |
Sarvottam FD திட்டத்திற்கான முதிர்வு காலம்:
இத்தகைய திட்டமானது 1 வருடம் மற்றும் 2 வருடம் என்று இரண்டு வகையான முதிர்வு காலத்தை கொண்டுள்ளது. ஆகையால் நீங்கள் இத்திட்டத்தின் கீழ் சேருவதற்கு முன்பாக முதிர்வு காலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
SBI பேங்கில் 15,00,000 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:
மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகள் படி நீங்கள் இத்திட்டத்தில் 15,00,000 ரூபாய் முதலீடு செய்தால் 2 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் தொகை எவ்வளவு என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
General Citizen | Senior Citizen | |||
முதலீடு செய்த தொகை | வட்டி தொகை% | மொத்த தொகை | வட்டி தொகை% | மொத்த தொகை |
15,00,000 ரூபாய் | 2,36,918 ரூபாய் | 17,36,918 ரூபாய் | 2,54,045 ரூபாய் | 17,54,045 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ மாதந்தோறும் 2,000 ரூபாய் செலுத்தினால் 3 லட்சம் பெறக்கூடிய அருமையான திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |