1000 ரூபாய் செலுத்தினால் போதும் 7,24,974 ரூபாய் பெறக்கூடிய SBI வங்கியின் புதிய சேமிப்பு திட்டம்..!

Advertisement

SBI Tax Saving Scheme 

பணம் என்பது நம்முடைய அன்றாட தேவைகள் மட்டும் இல்லாமல் நம்முடைய மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்கு அவசியமான ஒன்றாக உள்ளது. அத்தகைய பணத்தினை நாம் எளிமையாக பெற முடியாது. ஏனென்றால் அந்த பணத்தினை பெற நாம் உழைக்க வேண்டியது என்பது முக்கியமான ஒன்று. அப்படி நாம் சம்பாதிக்கும் பணத்தில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்தது போக மீதம் உள்ள பணத்தினை சேமித்தால் மட்டுமே எதிர்காலத்தில் நாம் யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வதற்கு உதவியாக இருக்கும். அதனால் நாம் சேமிக்கும் பணத்தினை வங்கி, அஞ்சல் துறை மற்றும் நிதி நிறுவனம் போன்ற இடங்களில் சேமித்து வைத்தால் தான் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து அதிகமான தொகை கிடைக்கும். ஆகவே இன்றைய பதிவில் 1000 ரூபாய் செலுத்தி 7,24,974 ரூபாய் பெறக்கூடிய SBI வங்கியின் அருமையான ஒரு திட்டத்தை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன்பெறலாம் என்பது பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ தபால் துறையில் ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் போதும் 67,750 ரூபாய் பெறக்கூடிய திட்டம்..

SBI Tax Saving Scheme Details in Tamil:

SBI வங்கியில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டமானது முற்றிலும் Tax Saver திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் வட்டி முதல் முதிர்வு காலம் என அனைத்தும் General Citizen மற்றும் Senior Citizen இரண்டு நபர்களுக்கும் முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது.

முதலீடு தொகை:

இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சேர விரும்பினால் அவர்களுக்கான குறைந்தபட்ச முதலீடு தொகை 1,000 ரூபாய் ஆகும்.

அதுவே மூத்த குடிமக்களுக்கான குறைந்த பட்ச முதலீடு தொகை 10,000 ரூபாயாகும். மேலும் இந்த திட்டத்திற்கான அதிகபட்ச தொகை என்றால் உங்களால் முடிந்த தொகையினை செலுத்தி கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

SBI வங்கி அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தில் பொது மக்களுக்கான வட்டி விகிதம் 6.50% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி விகிதம் ஆகும்.

முதிர்வு காலம்:

இத்தகைய திட்டத்திற்கான முதிர்வு காலம் என்பது 2 வகையில் உள்ளது.

  • 5 வருடம்
  • 10 வருடம்

லோன் வசதி:

நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் சேமிக்க ஆரம்பித்து விட்டால் இடையில் லோன் பெரும் வசதி எதுவும் இதில் கிடையாது. உங்களுடைய முதிர்வு காலம் முடிந்த பிறகு வட்டி தொகை + முதலீடு தொகை இரண்டினையும் பெறலாம்.

SBI வங்கியில்1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:

இத்திட்டத்தின் கீழ் நீங்கள் 1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்தால் 5 வருடத்திற்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI Tax Saving Scheme Details
General Citizen Senior Citizen
முதலீடு  தொகை வட்டி தொகை மொத்த தொகை வட்டி தொகை மொத்த தொகை
1 லட்சம் 38,041 ரூபாய் 1,38,041  ரூபாய் 44,994 ரூபாய் 1,44,994 ரூபாய்
5 லட்சம் 1,90,209 ரூபாய் 6,90,209 ரூபாய் 2,24,974 ரூபாய் 7,24,974 ரூபாய்

 

இதையும் படியுங்கள்⇒ 400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம்.! மார்ச் 31 கடைசி தேதி..

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement