3 மாதத்திற்கு ஒரு முறை 61,500 ரூபாய் வருமானம் தரக்கூடிய போஸ்ட் ஆபீஸின் அசத்தலான சேமிப்பு திட்டம்…!

Advertisement

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

போஸ்ட் ஆபீஸில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் நன்மை தரக்கூடிய நிறைய சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அத்தகைய திட்டங்கள் அனைத்திலும் மக்கள் அவர்களால் முடிந்த தொகையினை சேமித்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் மற்ற வங்கி அல்லது நிதி நிறுவனத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தபால் துறையில் வட்டி அதிக அளவு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் தபால் நிலையமானது மூத்த குடிமக்களுக்கும் ஒரு சேமிப்பு திட்டத்தினை தனியாக அறிமுகம் செய்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் சேர்ந்து சேமிக்க தொடங்குவதன் மூலமாக எதிர்கால தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஆகையால் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸில் மூத்த குடிமக்களுக்காக உள்ள இந்த திட்டடத்தினை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SCSS Scheme in Post Office 2023:

போஸ்ட் ஆபீசில் அறிமுகம் செய்து இத்தகைய முற்றிலும் மூத்த குடிமக்களுக்கானது மட்டும் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த திட்டத்தில் மற்ற சேமிப்பு திட்டங்களை விட அதிக அளவு வட்டி வழங்கப்படுகிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

வயது எவ்வளவு:

தபால் துறையில் உள்ள இந்த SCSS திட்டத்தில் 60 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் உங்களுடைய ஊரில் உள்ள போஸ்ட் ஆபீஸிலேயே சேர்ந்து சேமிக்க தொடங்கலாம்.

முதலீடு தொகை எவ்வளவு:

இத்தகைய திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்த பட்ச தொகை 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச தொகையாக 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 30,00,000 ரூபையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்👇👇
தினமும் 79 ரூபாய் சேமித்து 9,50,000 லட்சம் பெறும் அரசு திட்டம்..!

வட்டி தொகை எவ்வளவு:

SCSS திட்டத்தில் வட்டி விகிதமாக 8.2% அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வட்டி விகிதமானது இந்த ஆண்டில் குறிப்பாக 2023 முதல் 2024 வரை சேர உள்ள மூத்த குடிமக்களுக்கு மட்டும் பொருந்தும்.

அதன் பின்பு வட்டி விகிதம் மாறும். அதுபோல இதில் உங்களுடைய வட்டி தொகையினை 3 மாதத்திற்கு ஒரு முறை பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.

முதிர்வு காலம் எவ்வளவு:

இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து சேமிக்க தொடங்கும் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் முதிர்வு காலமாக 5 வருடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் முடிந்த பிறகு மீண்டும் கணக்கை 3 வருடம் நீட்டித்துக்கொள்ளலாம்.

Post Office Senior Citizen Savings Scheme 2023:

முதலீடு தொகை  3 மாதத்திற்கான வட்டி தொகை  5 வருடத்திற்கான வட்டி தொகை  மொத்த தொகை 
1 லட்சம் 2,050 ரூபாய் 41,000 ரூபாய் 1,00,000 ரூபாய்
5 லட்சம் 10,250 ரூபாய் 2,05,000 ரூபாய் 5,00,000 ரூபாய்
10 லட்சம் 20,500 ரூபாய் 4,10,000 ரூபாய் 10,00,000 ரூபாய்
15 லட்சம் 30,750 ரூபாய் 6,15,000 ரூபாய் 15,00,000 ரூபாய்
30 லட்சம் 61,500 ரூபாய் 12,30,000 ரூபாய் 30,00,000 ரூபாய்

 

ஏப்ரல் முதல், மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் பெறும் பெண்களுக்கான சிறப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement