தபால் துறையில் 90 நாட்களுக்கு ஒரு முறை 60,000 ரூபாய் வருமானம் தரும் அருமையான திட்டம்..!

Advertisement

SSCS Saving Scheme 2023 Post Office 

இந்த காலத்தை பொறுத்தவரை ஒரு வீட்டில் ஆண் மற்றும் பெண் என இருவரும் வேலைக்கு செல்கின்றனர். ஆனால் அப்படி வேலைக்கு செய்வது என்பது மிகவும் முக்கியம் கிடையாது. ஏனென்றால் இருவர் வேலை செய்வதில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகையினையாவது சேமித்து வைக்க வேண்டும். சேமிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆகையால் உங்களுடைய சம்பளத்தில் உங்களால் முடிந்த குறிப்பிட்ட தொகையினை கட்டாயமாக சேமிக்க வேண்டும். அப்படி சேமிக்கலாம் என்று முடிவு செய்து விட்டால் அந்த தொகையினை போஸ்ட் ஆபிஸியோ அல்லது வங்கியிலோ சேமிக்க வேண்டும். அவ்வாறு சேமித்தால் வட்டி தொகை அதிகமாக கிடைக்கும். அதனால் தபால் துறையில் 90 நாட்களுக்கு ஒரு முறை 60,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய ஒரு அருமையான திட்டத்தை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ தபால் துறையில் ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் போதும் 67,750 ரூபாய் பெறக்கூடிய திட்டம்..

Post Office Senior Citizen Savings Scheme 2023:

போஸ்ட் ஆபீஸில் அறிவித்துள்ள இந்த திட்டமானது மூத்த குடிமக்களுக்கான ஒரு திட்டம் ஆகும். ஆகவே 60 வயதிற்கு மேல் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் இதில் பயன்பெறலாம்.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் உங்களுடைய கணக்கில் வட்டி தொகை வழங்கப்படும்.

முதலீடு தொகை:

Senior Citizen Savings திட்டத்திற்கான குறைந்த பட்ச முதலீடு தொகை 1,000 ரூபாய் ஆகும். அதுவே அதிகபட்ச தொகை என்றால் 15 லட்சம் ரூபாய் ஆகும். இந்த அதிகபட்ச தொகையானது மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த திட்டத்திற்கான அதிக பட்ச தொகையாக 30 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வட்டி விகிதம்:

தபால் துறையில் மூத்த குடிமக்களுக்கு என்றே அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 8% ஆகும்.

முதிர்வு காலம்:

இத்தகைய திட்டத்திற்கான முதிர்வு காலம் என்பது 5 வருடம் ஆகும். அதுவே 5 வருடம் முடிந்த பிறகு மீண்டும் இந்த திட்டத்தில் தொடர வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது.

அதுபோல இந்த திட்டத்தில் பாதியில் நீங்கள் கணக்கை முடித்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான சில Option-ம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Option- 1

1 வருடம் கழித்த பிறகு நீங்கள் இந்த திட்டத்தை பாதியில் முடித்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் முதலீடு செய்த தொகையில் இருந்து 1.5% தொகை பிடிக்கப்பட்டு மீதம் உள்ள குறிப்பிட்ட தொகை தான் உங்களுக்கு தபால் துறையில் வழங்கப்படும்.

Option- 2

அதுவே 2 வருடம் கழித்த போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த கணக்கை முடித்து கொண்டால் உங்களுடைய முதலீடு தொகையில் இருந்து 1% தொகை பிடிக்கப்பட்டு மீதம் உள்ள குறிப்பிட்ட தொகை மட்டும் தான் வழங்கப்படும்.

தபால் துறையில் இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடத்தில்  எவ்வளவு தொகை கிடைக்கும்:

நீங்கள் போஸ்ட் ஆபீஸில் Senior Citizen Savings திட்டத்திற்கு கீழ் 1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையினை முதலீடு செய்தால் 5 வருடத்திற்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Post Office Senior Citizen Savings Scheme 2023
முதலீடு செய்த தொகை 3 மாதத்திற்கான வட்டி தொகை  மொத்த வட்டி தொகை  5 வருடத்திற்கான Maturity தொகை 
1 லட்சம் 2,000 ரூபாய் 40,000 ரூபாய் 1 லட்சம் ரூபாய்
5 லட்சம் 10,000 ரூபாய் 2,00,000 ரூபாய் 5 லட்சம் ரூபாய்
10 லட்சம் 20,000 ரூபாய் 4,00,000 ரூபாய் 10 லட்சம் ரூபாய்
15 லட்சம் 30,000 ரூபாய் 6,00,000 ரூபாய் 15 லட்சம் ரூபாய்

 

ஏப்ரல் 1 முதல்:

ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் அதிகபட்ச தொகையான 30,000 ரூபாயினை இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்

முதலீடு செய்த தொகை 3 மாதத்திற்கான வட்டி தொகை  மொத்த வட்டி தொகை  5 வருடத்திற்கான Maturity தொகை 
30 லட்சம் 60,000 ரூபாய் 12,00,000 ரூபாய் 30 லட்சம் ரூபாய்

 

இதையும் படியுங்கள்⇒ 400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம்.! மார்ச் 31 கடைசி தேதி..

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement