SCSS சேமிப்பு திட்டம்
இன்றைய சூழலில் நமது அன்றாட தேவைகள் அனைத்திற்கும் மூலம் பணம் என்றாகிவிட்டது. அதாவது பணம் இல்லாமல் நம்மால் ஒருநாளை கூட கடக்க முடியாது. மனிதனிற்கு தரும் மதிப்பை விட இப்போது பணத்திற்கு அதிக மதிப்பு உள்ளது. எனவே நாம் அனைவரும் தேவைக்காக ஓடி ஓடி பணம் சம்பாதிக்கின்றோம். அப்படி ஓடி ஓடி சம்பாதித்தாலும் நம்மால் அவற்றை சேமிப்பதில் சிறந்த பலன் கிடைப்பதுதில்லை. அதாவது சில சமயங்களில் நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும் பொழுது நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கும். அதனால் தான் நமது எதிர்கால தேவைக்காக நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து சிறிய அளவு சேமித்தலும் அது ஆபத்தான சூழ்நிலையில் பயன்படுவதில்லை. காரணம் நாம் சரியான சேமிப்பை தேர்தெடுப்பதில்லை. இன்றைய சூழலில் சிறந்த சேமிப்பு தளமாக இருப்பது அஞ்சல் துறை தான். அஞ்சல் துறையில் சேமிக்கும் திட்டங்கள் பாதுகாப்பானது மற்றும் நமக்கு தேவைப்படும் சமயங்களில் அவற்றை பயன்படுத்துவதும் சிறந்தது. அப்படி ஒரு சேமிப்பு திட்டத்தினை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
அஞ்சல் துறையின் SCSS சேமிப்பு திட்டம்:
தகுதி:
இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் உங்களுக்கு 55 முதல் மேலும் 60 வயதிற்குமேல் இருக்க வேண்டும்.
அரசு மற்றும் சிவில் ஊழியர்கள் என்றால் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதலீடு செய்யலாம்.
இந்த சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கு NRI-கள் தகுதியற்றவர்கள்
சேமிப்பு தொகை:
இதில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 30 லட்சம் வரையிலும் சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 60 மாதங்கள் ஆகும். அதாவது 5 ஆண்டுகள் ஆகும்.
வட்டி விகிதம்:
இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதம் தோராயமாக 7.4 % ஆகும். வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கும் உயரும்.
SCSS இன் நன்மைகள்:
- SCSS என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் முதலீட்டுத் திட்டமாகும், எனவே இது பாதுகாப்பானதாகவும் மிகவும் நம்பகமாக தன்மையும் அதிகம்.
- SCSS கணக்கை இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட வங்கி மற்றும் தபால் நிலையங்களிலும் மிக எளிமையாக கணக்கை தொடங்கலாம்.
- உங்கள் கணக்கை இந்தியா முழுவதும் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.
- இத்திட்டம் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்கப்படுகிறது.
- இந்திய வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை இந்த திட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.
- கணக்கின் முதிர்வு காலத்தை 5 ஆண்டு முடிவில் மேலும் 3ஆண்டுகள் நீட்டிக்கலாம்.
SCSS Calculation:
முதலீடு காலம் :5 வருடம்
சேமிப்பு தொகை : 5,00,000 ரூபாய்
மொத்த வட்டி தொகை : 2,64,000 ரூபாய்
மூன்று மாத வருமானம் : 9,250 ரூபாய்
மொத்த முதிர்வு தொகை : 6,85,000 ரூபாய்
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |