தபால் துறை சீனியர் சிட்டிசன் திட்டம்
தபால் துறையில் RD திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டமும் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இவை இரண்டு இல்லாமல் இன்னும் எண்ணற்ற திட்டங்கள் போஸ்ட் ஆபீசில் இருக்கிறது. அத்தகைய திட்டங்களில் போஸ்ட் ஆபீசில் மூத்த குடிமக்கள் திட்டமும் ஒன்று ஆகும். மேலும் இது அரசின் திட்டம் என்பதால் தபால் துறை மட்டுமின்றி வங்கிகளிலும் இருக்கிறது. ஆகவே இன்று போஸ்ட் ஆபீசில் உள்ள சீனியர் சிட்டிசன் திட்டம் பற்றியும், அதில் நமக்கான விதிமுறைகள் என்ன என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office Senior Citizen Scheme 2023:
சீனியர் சிட்டிசன் திட்டத்தினை உங்களுடைய ஊரில் உள்ள தபால் துறையிலேயே திறந்து சேமிக்க தொடங்கலாம். அதேபோல் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு மூத்த குடிமக்களும் இதில் சேரலாம்.
சேமிப்பு திட்டத்திற்கான தகுதி:
Post Office Senior Citizen Scheme | |
வயது தகுதி | சேமிப்பு தொகை |
60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் | 1,000 ரூபாய் முதல் 30,00,000 ரூபாய் வரை எவ்வளவு வேண்டுனாலும் சேமிக்கலாம் |
வட்டி விகிதம்%:
போஸ்ட் ஆபீசில் உள்ள மூத்த குடிமக்களுக்கான திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதமாக 8.2% அளிக்கப்படுகிறது. மேலும் 5 வருடத்திற்கு இத்தகைய வட்டி மாற்றம் இல்லாமல் இருக்கும்.
முதிர்வு காலம்:
இதில் உங்களுக்கான சேமிப்பு காலமாக 5 வருடம் அளிக்கப்படுகிறது. மேலும் கூடுதல் சேமிப்பு காலமாக 3 வருடமும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
திட்டத்தில் எவ்வளவு ரூபாய் வரை பெறலாம்:
Post Office Monthly Income Scheme 2023 | |||
சேமிப்பு தொகை | 3 மாத வட்டி | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால தொகை |
Rs.1,000/- | Rs.20/- | Rs.410/- | Rs.1,410/- |
Rs.20,000/- | Rs.410/- | Rs.8,200/- | Rs.28,200/- |
Rs.75,000/- | Rs.1,537/- | Rs.30,750/- | Rs.1,05,750/- |
Rs.1,25,000/- | Rs.2,562/- | Rs.51,250/- | Rs.1,76,250/- |
Rs.3,00,000/- | Rs.6,150/- | Rs.4,23,000/- | Rs.1,23,000/- |
தபால் துறையில் 10,000 ரூபாய் முதலீடு போட்டு 68480 ரூபாய் பெற வேண்டுமா
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |