போஸ்ட் ஆபீஸ் திட்டம்
இதுநாள் வரையிலும் நமது ஊரிலேயே நமக்கு நன்மை தரக்கூடிய நிறைய போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் இருக்கிறது. செல்வமகள் திட்டம், Rd திட்டம், மாதம் தோறும் வருமானம் தரும் மற்றும் ஆண் பிள்ளைகளுக்கான திட்டம் என்று நிறைய இருக்கிறது. அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் புதிதாக ஒரு திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 10,000 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெற முடியும். இப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட இந்த திட்டத்தில் யார் யார் பங்குபெற முடியும் மற்றும் இதர விவரங்கள் பற்றி தெளிவாக தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாங்க..!
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 5 வருடத்தில் 6,96,967 ரூபாய் வாங்கலாமா..! நல்ல திட்டமா இருக்கே..!
Senior Citizen Savings Scheme in Post Office:
இந்த Senior Citizen Savings Scheme ஆனது 5 வருடம் கால அளவிலான திட்டம் ஆகும். நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 1000 ரூபாய் முதல் 15 லட்சம் வரையில் சேமிப்பு தொகையினை செலுத்தி கொள்ளலாம்.
போஸ்ட் ஆபீஸில் உள்ள இத்திட்டத்தின் வட்டி விகிதமானது 8% ஆகும். அதுமட்டும் இல்லாமல் மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை உங்களுக்கு வட்டி தொகை 5 வருடமும் தொடர்ச்சியாக வழங்கப்படும்.
5 வருடம் கழித்த பிறகு நீங்கள் சேமித்த தொகை எந்த வித மாற்றமும் இல்லாமல் முழுமையாக அப்படியே பெற்று கொள்ளலாம்.
அதுபோல இந்த திட்டத்தில் நீங்கள் சேரும் போது இருக்கும் வட்டி தொகையானது எந்த விதமான மாற்றமும் இல்லாமல் 5 வருடமும் அப்படியே இருக்கும்.
5 வருடம் காலஅளவிலான இந்த திட்டத்தை நீங்கள் தொடர விரும்பினால் அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதனால் 4-வது வருடம் வந்த பிறகு உங்களுடைய விருப்பம் போல நீங்கள் இந்த இடத்தினை மீண்டும் 3 வருடம் வரை நீடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
விதிமுறைகள்:
5 வருடம் கால அளவிலான இந்த Senior Citizen Savings திட்டத்தில் நீங்கள் சேர்ந்த பிறகு திடீரென கணக்கை முடிக்க வேண்டும் என்றால் அதனையும் செய்து கொள்ளாலாம். ஆனால் அதற்கு 1 வருடம் கண்டிப்பாக முடிந்துருக்க வேண்டும்.
1 வருடம்:
1 வருடம் முடிந்த பிறகு நீங்கள் இந்த கணக்கை முடிக்க வேண்டும் என்றால் உங்களுடைய சேமிப்பு தொகையில் இருந்து 1.5% கூடிய குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு மீதம் உள்ள தொகை மட்டும் போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும்.
2 வருடம்:
அதேபோல 2 வருடம் கழித்து கணக்கை முடிக்க வேண்டும் என்றால் உங்களுடைய சேமிப்பு தொகையில் இருந்து 1% கூடிய குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படும். அதன் பிறகு மீதம் உள்ள தொகை மட்டும் உங்களுக்கு வழங்கப்படும்.
தகுதி:
- 60 வயதிற்கு மேல் உள்ள ஆண் மற்றும் பெண் தான் இந்த திட்டத்தில் சேர முடியும்.
- ஒருவேளை வேலைக்கு செல்லும் நபர்கள் 55 வயதிற்கு மேல் VRS பெற்றிருந்தால் இந்த திட்டத்தின் கீழ் போஸ்ட் ஆபீஸில் சேர முடியும்.
சீனியர் சிடிஸின் சேவிங்ஸ் ஸ்செமே போஸ்ட் ஆபீஸ்:
Senior Citizen Savings Scheme in Post Office | |||
சேமிப்பு தொகை | 3 மாத வட்டி தொகை | 5 வருடத்திற்கான வட்டி தொகை | முதிர்வு காலம் |
1 லட்சம் | Rs. 2,000/- | Rs. 40,000/- | Rs. 1 லட்சம் |
5 லட்சம் | Rs. 10,000/- | Rs. 2,00,000/- | Rs. 5 லட்சம் |
10 லட்சம் | Rs. 20,000/- | Rs. 4,00,000/- | Rs.10 லட்சம் |
15 லட்சம் | Rs. 30,000/- | Rs. 6,00,000/- | Rs. 15 லட்சம் |
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |