இன்று தொடங்க இருக்கும் தங்க பத்திர விற்பனை.. முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பு..!

SGB Gold Bond 2023-24 Dates in Tamil

இன்று தொடங்க இருக்கும் தங்க பத்திர விற்பனை.. முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பு..! SGB Gold Bond 2023-24 Dates in Tamil..!

தங்கம் என்ற ஒன்று இன்றைய கால கட்டத்தில் அவசியம் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாகவே பலர் இன்றைய கால கட்டத்தில் தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றன. அந்த வகையில் ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெளியிடும் தங்க பத்திர விற்பனையானது 202223ம் நிதியாண்டின் IV சீரிஸ் ஆனது வெளியாகவுள்ளது. இந்த தங்க பத்திரம் இன்று வெளியாகும் நிலையில் ஒரு கிராமிற்கு எவ்வளவு விலை நிர்ணகித்துள்ளது. இந்த தங்க பத்திரம் விற்பனைஎப்போது தொடங்கப்பட்டு, எப்போது முடிவடைகிறது என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

SGB Gold Bond 2023-24 Dates in Tamil:SGB Gold Bond

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறோம், அது எதற்காக என்றால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இதன் காரணமாக தான் அனைவருமே தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறோம். இந்த தங்கத்தை நாம் நேரடியாக கடைகளில் வாங்குவதை விட, எலக்ட்ரானிக் முறையில் Sovereign Gold Bond அதாவது தங்க முதலீட்டு பத்திரமாக வாங்குகிறோம் என்றால். நீங்கள் இரண்டு விதமான லாபத்தை பெறலாம். அவை..

ஒன்று நீங்கள் எந்த தேதியில் இந்த பாண்டை வாங்குகிறீர்களோ.. அன்றைய நாள் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதோ அந்த விலைக்கு உங்களுக்கு சடிவிக்கேட் கொடுப்பார்கள். இந்த சடிவிக்கேடின் கால அளவு 8 வருடம் நிர்ணகித்துள்ளனர். 8 வருட கால அளவு முடிந்தபிறகு அன்றைய ஆனால் தங்கம் ஒரு கிராம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதோ அதற்கு சமமான தொகையை உங்களுக்கு வழங்குவார்கள். கூடுதலாக ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு 2.5% வட்டி வாழங்குவார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 ஆண்டில் 14 லட்சம் பெரும் தபால் துறை சேமிப்பு திட்டம்

யாரெல்லாம் இந்த பாண்டை வாங்கலாம்?

இந்த தங்க முதலீட்டு பத்திரத்தை இந்தியர்கள் தனி நபராகவோ அல்லது கூட்டாகவோ வந்த பாண்டை வாங்கலாம். மேலும் ஹெச் யு எஃப் (HUFs), அறக்கட்டளைகள் மற்றும் பல்கலைக் கழங்கள், தொண்டு நிறுவனங்கம் என பலரும் வாங்கி வைக்கலாம். இந்த தங்க பத்திரங்கள், அரசுப் பத்திரச் சட்டம் 2006ன் கீழ் இந்திய அரசின் மூலம் ரிசர்வ் வங்கியால் அரசின் பத்திரங்கள் வடிவிலேயே வழங்கப்படுகின்றன.

எங்கெல்லாம் இந்த தங்க முதலீட்டு பத்திரத்தை வாங்கலாம்?

இந்த தங்க பத்திரத்தை நீங்கள் அஞ்சல் அலுவலகம், தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைனிலும் எளிதாக வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் நீங்கள் 20 ஆயிரம் ரூபாயை பணமாக கொடுத்து இந்த தங்க பத்திரத்தை வாங்கிக்கொள்ளலாம். 20 ஆயிரத்துக்கும் மேல் வாங்க வேண்டும் என்றால் Demand Draft, Check அல்லது ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

எவ்வளவு வாங்கலாம்?

ஒரு தனி நபர் இந்த பாண்டை 4000 கிராம் வரை வாங்கலாம், அது அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும்.

கால அளவு:

இந்த பாண்டிங் கால அளவு 8 வருடங்கள் ஆகும். இன்று நீங்கள் இந்த பாண்டை வாங்கினால் அடுத்த 8 வருடத்திற்கு பிறகு, தங்கத்தின் மதிப்பு எவ்வளவோ அதற்கு சமமான பணத்தை உங்களுக்கு வழங்குவார்கள்.

வட்டி:

இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.

தங்க பத்திரம் வெளியிடும் நாள் | SGB Release Date 2023:

இந்த தங்க முதலீடு பத்திரம் மார்ச் 6 முதல் மார்ச் 10 தேதி வரை வெளியிடப்படுகிறது. ஆக அதுவரை நீங்கள் இந்த தங்க பத்திரத்தை வாங்கிக்கொள்ளலாம்.

ஒரு கிராம் தங்கள் விலை எவ்வளவு நிர்ணகிக்கப்பட்டுள்ளது?

ஒரு கிராமுக்கு விலை 5611 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாண்டை நீங்கள் ஆன்லைன் மூலமாக வாங்குகிறீர்கள் என்றால் ஒவ்வொரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக வாங்குபவர்களுக்கு ஒரு கிராம் 5561 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 லட்சம் முதலீட்டிற்கு 2 லட்சம் வருமானம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil