இலவச தொழில் பயிற்சி 2022 – SIPPO Business Loan in Tamil
இலவச தொழில் பயிற்சி 2022:- சுயமாக தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் வணக்கம்… இந்த பதிவில் வேளாண் சார்ந்த தொழில் துவங்குவதற்க்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைத்து Small Industries Product Promotion Organisation (SIPPO) என்று அழைக்கப்படும் நிறுவனத்தை உருவாக்கி. இந்த நிறுவனம் மூலமாக வேளாண் சார்ந்த தொழில் துவங்குவதற்கான அனைத்து பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது. அதன் பிறகு நபார்டு வங்கி மூலம் மானியத்துடன் கடன் வழங்குகிறது. அதனை பற்றி சில விவரங்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
திட்டத்தின் நோக்கம்:
வேளாண்மை பயின்றவர் சுயதொழில் துவங்கவும், அவர்கள் மூலமாக விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுக்க இத்திட்டத்தை மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம் வேளாண் சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும். வேளாண் சார்ந்த தொழில் துவங்குபவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதுமே இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
ரூ.25 லட்சம் கடனுதவி வழங்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்..! |
யாரெல்லாம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்?
இது வேளாண் சம்மந்தப்பட்ட தொழில் துவங்குவதற்கான பயிற்சி என்பதினால் வேளாண் துறை சார்ந்த பட்டம், பட்டயம் படிப்பு முடித்தவர்கள் இந்த SIPPO Business Loan-யிற்கு அப்ளை பண்ணலாம். அதாவது இளங்கலை தாவரவியல், விலங்கியல், வேதியியல், சுற்றுச்சூழல், வேளாண் பொறியியல், பட்டுப்பூச்சி வளர்ப்பு மற்றும் வேளாண் சார்ந்த பட்டம், பட்டயம், 12-ம் வகுப்பு படித்து வேளாண் சார்ந்த சான்றிதழ் படிப்பு பயின்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
பயிற்சி காலம்:
வேளாண் பயின்றவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியின் போது உணவு, தங்குமிடம், பயிற்சி புத்தகங்கள் ஆகியவை இலவசம். அதேபோல் இந்த பயிற்சியின் போதே வங்கி கடன் பெறுவதற்கான அனைத்து திட்ட அறிக்கைகளும் தயார் செய்து தருகின்றனர்.
எவ்வளவு கடன் உதவி வழங்கப்படும்?
தகுதிக்கு ஏற்ப இவற்றில் பயிற்சி முடித்தவர்களுக்கு ஒரு நபருக்கு அதிகபட்ச வங்கிக்கடன் ரூ.20 லட்சம் வழங்கப்படும்.
எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது?
மகளிர், எஸ்.சி மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு 44 சதவீதமும், இதர பிரிவினருக்கு 36 சதவீதமும் நபார்டு வங்கி மானியம் வழங்குகிறது.
சிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி ? |
வயது தகுதி:-
விண்ணப்பிக்கும் தகுதி பெற்ற நபர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
குறிப்பு:- வேளாண் சார்ந்த கல்வி தகுதி பெற்ற யார் வேண்டுமானாலும் இந்த சுயதொழில் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதன் அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களுக்கு http://www.sippo.org.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள் நன்றி வணக்கம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |