சவரன் தங்க பத்திர முதலீடு திட்டம்..! Sovereign Gold Bonds Scheme..!

Advertisement

தங்க பத்திரம் சேமிப்பு திட்டம்..! Sovereign Gold Bond Scheme In Tamil..!

Sovereign Gold Bond Scheme: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் மத்திய அரசு அறிவித்த சவரன் தங்க பத்திர திட்டத்தினை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். நேரடியாக தங்க நகைகள் வாங்குவதை குறைத்து பத்திரம் வைத்து நகை வாங்குவதன் மூலம் தங்கம் இறக்குமதி செலவினை குறைக்கலாம் என்ற நோக்கத்தின் மூலமாக கொண்டுவரப்பட்டது தான் இந்த சவரன் தங்க பத்திரம் திட்டம்.

இந்த திட்டத்தின் கீழ் அக்டோபர் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை தொடர்ந்து 5 மாதங்கள் வரை முதலீடு செய்யலாம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நேரடியாக வாங்கும் தங்கத்தினை கிராம் கணக்கில் வாங்கும் அளவிற்கு சவரன் தங்க பத்திர திட்டத்திலும் முதலீடு செய்யலாம். சந்தை விலைக்கு ஏற்றவாறே முதலீடு செய்த பணத்தின் லாபமும் மதிப்பும் இந்த திட்டத்தில் நமக்கு கிடைக்கும். சரி இப்போது இது பற்றிய முழு விவரங்களையும் இங்கு படித்தறிவோம் வாங்க..!

newவிவசாய தங்க நகை கடன் திட்டம்..! Gold Loan Scheme For Farmers In SBI..!

தங்க பத்திரம் சேமிப்பு திட்டம்..! Sovereign Gold Bond Scheme in Tamil..!

தங்க பத்திர வெளியீடு:

சவரன் தங்க பத்திர திட்டத்தினை (sovereign gold bond in tamil) மத்திய அரசின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

எப்படி முதலீடு செய்யலாம்:

சில்லறை முதலீட்டாளர்களால் இந்த சவரன் தங்க பத்திரத்தினை வங்கி, அஞ்சல் அலுவலகம், பங்கு சந்தைகள் மூலமாக முதலீடு செய்யலாம்.

குறைந்தபட்சம் முதலீடு:

சில்லறை முதலீட்டாளர்களால் இந்த சவரன் தங்க பத்திர திட்டத்தில் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் முதலீடு செய்யலாம்.

அதிகபட்சம் முதலீடு:

சவரன் தங்க பத்திர திட்டத்தில் (sovereign gold bond scheme in tamil) ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக 4 கிலோ கிராம் வரை முதலீடு செய்யலாம். இதுவே அறக்கட்டளைகள் போன்ற அமைப்புகள் என்றால் 20 கிலோ கிராம் வரை சவரன் தங்க பத்திர திட்டத்தில் நாம்  முதலீடு செய்யலாம்.

முதிர்வு காலம்:

சவரன் தங்க பத்திர திட்டத்தில் (sovereign gold bond scheme in tamil) முதலீடு செய்து 8 வருடம் ஆகும்போது இதனுடைய முதிர்வு காலமாகும். இடையில் முதலீட்டை விட்டு வெளியேற விரும்பினால் 5,6,7 ஆண்டுகளில் வட்டி தொகையானது திரும்ப செலுத்தப்படும்போது வெளியேறலாம்.

1 கிராம் சவரன் தங்க பத்திர விலை:

சந்தையில் விற்கப்படும் சுத்தமான தங்கத்தினை விட கிராம் ஓன்றுக்கு ரூ.50/- குறைவாக செலுத்தி இந்த பத்திரத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

newதமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்..! Thalikku Thangam Thittam Scheme..!

வட்டி விகிதம் மற்றும் லாபம்:

இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு அரையாண்டின் காலத்தின் போதும் 2.5% வட்டி விகித லாபம் கிடைக்கும்.

வருமான வரி நன்மை:

வருமான வரி சட்டம் 1961-கீழ் சவரன் தங்க பத்திர திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு நாம் வரியினை தவறாது செலுத்த வேண்டும். குறிப்பாக தனி நபர்களுக்கு மூலதன ஆதாயம் வரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் மூலம் கடன் பெறலாமா: 

தங்க நகைகளை வைத்து கடன் பெறும் வகையில் சவரன் தங்க பத்திரத்தினை அடமானம் வைத்தும் கடன் தொகையினை பெறலாம்.

முதலீடு துவங்க தேவையான ஆவணம்:

gold bond scheme in tamil: இந்த சவரன் தங்க பத்திர திட்டத்தில் பான் கார்டு, டான் அல்லது ஆதார் கார்டு போன்ற சான்றினை வைத்து இந்த திட்டத்தின் மூலம் முதலீட்டை துவங்கலாம்.

new7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement