SSY Calculator Monthly 2000 in Tamil
வணக்கம் நண்பர்களே.. இப்பதிவில் பெண்குழந்தைகளுக்கான சூப்பரான சேமிப்பு திட்டத்தினை பற்றி தெரிந்து கொள்ளலாம். அரசு பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கு ஒரு சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளுக்கு ஒரு சேமிப்பு திட்டம் மற்றும் ஆண்களுக்கு ஒரு சேஷமிப்பு திட்டம் என பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் பற்றிய சில விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. முக்கியமாக இத்திட்டத்தில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்து வந்தால் 21 வருடங்களுக்கு பிறகு வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Sukanya Samriddhi Yojana 2000 Per Month in Tamil:
தகுதி:
இத்திட்டத்தில் 10 வயதிற்கும் குறைவாக உள்ள பெண் குழந்தையின் பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்.
ஒரு குழந்தையின் பெயரில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே ஓபன் செய்ய முடியும்.
குடும்பத்தில் உள்ள இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் இத்திட்டத்தில் அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளலாம்.
டெபாசிட் தொகை:
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
இத்திட்டத்தில் நடப்பு ஆண்டு வட்டி விகிதமாக 8% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
டெபாசிட் காலம்:
இத்திட்டத்தின் மொத்த கால அளவு 21 வருடம். ஆனால் முதல் 15 வருடங்கள் வரை தான் நீங்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம். மீதமுள்ள 6 வருடங்கள் நிங்கள் டெபாசிட் செய்ய தேவையில்லை.
SSY Calculator Monthly 2000 in Tamil:
மாத சேமிப்பு தொகை: 2,000 ரூபாய்
வட்டி விகிதம்: 8%
சேமிப்பு காலம்: 15 ஆண்டு
மொத்த வட்டி தொகை: 7,18,898
மொத்தம் டெபாசிட் செய்த தொகை : 3,60,000 ரூபாய்
21 வருடத்திற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து கிடைக்கும் மொத்த தொகை – 10,78,898
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |