21 வயதில் 41 லட்சம் வேண்டுமா? அப்போ இந்த ஸ்கீமில் டெபாசிட் செய்யுங்கள்..!

Advertisement

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் – SSY Scheme Details in Tamil

போஸ்ட் ஆபீசில் பொதுவாக பலவகையான சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இங்கு வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களுக்கு வட்டியும் ஓரளவு வருமானம் தரக்கூடியதாக இருக்கும். இதுமட்டும் இல்லாமல் அஞ்சல் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தான் மக்கள் பெரும்பாலானோரு அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. அந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்று தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு தற்பொழுது  வட்டி விகிதம் 8% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ள போகிறோம்.

SSY Scheme Details in Tamil:SSY Scheme

இது பெண் குழந்தைக்கான ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வரை கணக்கு தொடங்கலாம்.

இந்த சேமிப்பு திட்டத்தில் 18 வயதிற்கு மேல் உங்கள் பெண் குழந்தைக்கு திருமணம் ஆகும் போது தானாகவே முடிவடையும். அவ்வாறு இல்லை என்றால் அந்த பெண் குழந்தையின் 21 வயதில் தானாகவே முதிர்வடைந்துவிடும்.

இந்த திட்டத்தில் இணைய விருப்பவர்கள் இப்போதே தங்கள் ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சேரலாம்.

தற்பொழுது இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு 8% வட்டி வழங்கப்டுகிறதாம்.

இந்த திட்டத்தில் 80சி-யின் கீழ் வரிச் சலுகையும் கிடைக்கும். ஆக நீங்கள் சேமித்த தொகைக்கு எந்த ஒரு வரியும் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

இதையும் கிளிக் செய்யுங்கள்👇
ஒரு முறை முதலீடு செய்து 1,51,450 ரூபாய் பெரும் திட்டம்..

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவும் லாபம் கிடைக்கும்?

உதாரணத்திற்கு ஒருவர் மாதம் மாதம் தன் பெண் குழந்தையின் பெயரில் 12,500/- ரூபாய் முதலீடு செய்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வருடத்திற்கு அவர் முதலீடு செய்திருக்கும் தொகை 1.50 லட்சம் ஆகும்.

ஆக மொத்தம் ஒரு பெண் குழந்தை 21 வயதாகும் வரையில் இந்த திட்டத்தினை சரியாக தொடரும்பட்சத்தில் வட்டி வருவாயாக 41,15,155 ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் முதிர்வு தொகையாக 63,65,155 ரூபாயாகவும் கிடைக்கும்.

மேலும் இந்த திட்டம் குறைத்த தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை..!

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement