Sukanya Samriddhi Account New Interest Rates
ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் என்றால் கொஞ்சம் அதிக அக்கறை தான் செலுத்துவார்கள். என்றென்றால் பெண் குழந்தைகளை வளர்ந்த உடன் இன்னொருவருக்கு திருமணம் செய்துகொடுக்க போகிறோம் என்பதால் அந்த குழந்தைகளுக்கு மட்டும் பார்த்து பார்த்து சேமிப்பார்கள். அதுவும் குழந்தையாக இருக்கும்போது சேமிக்க தொடங்குவார்கள். அப்படி பெண்கள் குழந்தைகளுக்கு என்று உருவாக்கபட்டது தான் இந்த Sukanya Samriddhi திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு புதிய வட்டி நிர்ணயம் செய்துள்ளார்கள். அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Sukanya Samriddhi Account New Interest Rates:
இந்த திட்டத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறீர்களோ அந்த தொகை அதன் பின்பு அதனுடைய வட்டி தொகையை பெற முடியும்.
2,000 ரூபாய் செலுத்தினால் போதும் 3,25,000 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தின் கால அளவு 21 வருடம். இதில் முக்கியமாக முதல் 15 வருடம் மட்டும் தொகையை முதலீடு செய்யவேண்டும். கடைசி 6 வருடம் எந்த தொகையையும் முதலீடு செய்ய தேவை இல்லை.
எவ்வளவு முதலீடு செய்யலாம்:
குறைந்தபட்சமாக 250 ரூபாயும், அதிகபட்சமாக 1,50,000 வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கடைசியில் எவ்வளவு தொகை முதலீடு செய்தீர்களோ அந்த தொகை அதனுடைய வட்டியும் பெற்றுக்கொள்ளலாம்.
மாதந்தோறும் 420 ரூபாய் செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் பெறும் அரசின் திட்டம்
யார் இந்த திட்டத்தில் சேரலாம்:
இந்த திட்டத்தில் 10 வயதிற்கும் கீழ் உள்ள பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ் எங்கு வேண்டுமானாலும் சேர்ந்துக் கொள்ளலாம்.
வட்டி:
முன்பு இந்த திட்டத்திற்கு 7.6 சதவீதம் வழங்கிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இந்த ஏப்ரல் 1 தேதி புதன் புதிதாய் வட்டியாக 8 சதவிதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த சதவீதம் வட்டியில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
மாதம் டெபாசிட் தொகை | மொத்த தொகை டெபாசிட் | வட்டி தொகை | மொத்த தொகை |
Rs.1000 | Rs.1,80,00/- | Rs.3,59,449/- | Rs.5,39,449/- |
Rs.5000 | Rs.9,00,000/- | Rs.17,97,247/- | Rs.26,97,227/- |
Rs.10,000 | Rs.18,00,000/- | Rs.35,94,494/- | Rs.53,94,494/- |
Rs.12,500 | Rs.22,50,000/- | Rs.44,93,118/- | Rs.67,43,118/- |
மாதம் Rs.5,325/- ரூபாய் வருமானம் தரும் அசத்தலான தபால் நிலைய சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |