Sukanya Samriddhi Account Post Office Scheme in Tamil
நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் குழந்தைகளுக்கானது ஆகும். அப்படி நாம் சம்பாதிக்கும் பணத்தை சரியாக சேமித்து வைத்தால் தான் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். இப்போது உங்களிடம் பணம் இருக்கிறது என்றால் அதனை அப்படியே உங்களின் குழந்தைகளுக்கு கொடுப்பதை விட அதனை இரட்டிப்பு தொகையாக கொடுத்தால் தான் நல்லது. இதற்கு என்று தனியாக பணத்தை சேமிக்க தேவையில்லை பணம் அதிகம் இருக்கிறது என்றால் அதனை அப்படியே மாதம் மாதம் செலுத்தி வந்தால் அதனுடைய முதிர்வு காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாங்க அதனை பற்றி தெளிவாக பார்க்கலாம்..!
Sukanya Samriddhi Account Post Office Scheme in Tamil:
பெண் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் கொண்டு வந்தது தான் செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். அதாவது Sukanya Samriddhi Account திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறீர்களோ அந்த தொகை அதற்கான வட்டி அனைத்தும் பெறலாம்.
இந்த திட்டத்தின் கால அளவு 21 வருடம் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் முதல் 15 வருடம் மட்டுமே முதலீடு செய்யவேண்டும் அடுத்து 6 வருடம் பணம் செலுத்த தேவையில்லை.
எவ்வளவு முதலீடு செய்யலாம்:
ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல், அதிகபட்சமாக 1,50,000 வரை முதலீடு செய்யலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஏப்ரல் 30 தான் கடைசி தேதி 400 நாட்களில் Rs.5,45,000/- தரும் சேமிப்பு திட்டம்
யார் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்:
அதிகபட்சமாக 10 வயதிற்கள் உள்ள பெண் குழந்தைகள் மட்டும் சேர்ந்து கொள்ளமுடியும். இந்த கணக்கை அனைத்து போஸ்ட் ஆபிஸிலும் திறக்கலாம்.
தேவையான ஆவணம்:
- பிறப்பு சான்றிதழ்
- ஆதார் கார்டு
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 3 மாதத்திற்கு ஒரு முறை 60,000 ரூபாய் தரும் அரசு சேமிப்பு திட்டம்
வட்டி:
Sukanya Samriddhi Account திட்டத்தில் 8 சதவீதம் வட்டி 2023 ஆம் ஆண்டு வழங்கப்படுகிறது. இந்த வட்டியானது ஏப்ரல் 1 தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்த வட்டியின் அடிப்படையில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
டெபாசிட் தொகை (மாதம்) | மொத்த டெபாசிட் தொகை | வட்டி | முதிர்வு தொகை |
Rs.1000/- | Rs.1,80,000/- | Rs.3,59,449/- | Rs.5,39,449/- |
Rs.5,000/- | Rs.9,00,000/- | Rs.17,97,247/- | Rs.26,97,247/- |
Rs.10,000/- | Rs.18,00,000/- | Rs.35,94,494/- | Rs.53,94,494/- |
Rs.12,500/- | Rs.22,50,000/- | Rs.44,93,118/- | Rs.67,43,118/- |
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஏப்ரல் 10 முதல் அறிமுகம்: 36 மாதத்தில் ₹ 6,21,200/- பெறும் அருமையான திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |